புதினங்களின் சங்கமம்

மட்டு’வில் மேசன் வேலைக்குச் சென்ற பட்டதாரி இளைஞன் துாண் இடிந்து வீழ்ந்து பலி!!

காத்தான்குடியில் தூண் இடிந்து பலியான பட்டதாரி இளைஞர் – அரசுப் பணிக் கனவுடன் வாழ்ந்த 28 வயது இளைஞரின் சோக முடிவு!
காத்தான்குடியில் கட்டுமானப் பணியின்போது தூண் இடிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்த 28 வயதுடைய இளைஞர், கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் பட்டம் பெற்ற பட்டதாரி என்பதும், அரசுப் பணியில் இணைவதை தனது இலட்சியமாகக் கொண்டு முயற்சித்து வந்தவரும் ஆவார் என்பது தெரியவந்துள்ளது.
உயிரிழந்த இளைஞர் மட்டக்களப்பு, ஜெயந்திபுரத்தைச் சேர்ந்தவராவார். அவரது அண்ணன் இலங்கை பொலிஸில் உத்தியோகத்தராகப் பணியாற்றி வருகின்றார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் பட்டம் பெற்ற பின்னர், அரச வேலைவாய்ப்பைப் பெறுவதற்காக தொடர்ந்து முயற்சிகளில் ஈடுபட்டு வந்த அவர், நிரந்தர வேலை கிடைக்கும் வரை குடும்பப் பொறுப்புகளைச் சுமக்க மேசன் மற்றும் ஓடாவி உள்ளிட்ட கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த புதன்கிழமை விடுமுறை நாளாக இருந்த போதிலும், தனது தொழிலின் மீது கொண்டிருந்த அர்ப்பணிப்பும் பொறுப்புணர்வும் காரணமாக கட்டுமானப் பணிக்குச் சென்றுள்ளார். அங்கு நிர்மாணிக்கப்பட்டு வந்த இரு மாடிக் கட்டிடத்தின் மேற்பகுதியில் நின்று, தூணுக்கு அமைக்கப்பட்டிருந்த மரப்பலகைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக தூண் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பல கனவுகளையும் எதிர்கால இலட்சியங்களையும் சுமந்து வாழ்ந்த இளம் பட்டதாரியின் திடீர் மரணம் அவரது குடும்பத்தினரையும், நண்பர்களையும், பல்கலைக்கழக சமூகத்தினரையும் மட்டுமன்றி, முழு சமூகத்தையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x