புதினங்களின் சங்கமம்

நெடுங்கேணியில் தொட்டில் முறிந்து 5 மாத குழந்தை பலி!

நெடுங்கேணி பகுதியில் நடந்த சோகம்.. பறிபோன 5 மாத பெண் குழந்தையின் உயிர்..😥😥

வவுனியா – நெடுங்கேணி, குளவிசுட்டான் கிராமத்தில் ஊஞ்சல் தடி முறிந்து விழுந்ததில் 5 மாதக் பெண் குழந்தை ஒன்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது..

நேற்று (27) குறித்த கிராமத்தைச் சேர்ந்த குடும்பத்தினரின் வீட்டில் ஊஞ்சல் கட்டப்பட்டிருந்த தடி எதிர்பாராதவிதமாக சரிந்து விழுந்துள்ளது.

இதில் படுகாயமடைந்த 5 மாதக் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

மேலும், இச்சம்பவத்தில் குழந்தையின் தாயாரின் காலிலும் தடி விழுந்ததில் அவர் காயமடைந்துள்ளார் என கூறப்படுகின்றது.

#தாய் உடனடியாக மீட்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக #வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த குழந்தையின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சோகச் சம்பவம் தொடர்பாக #கனகராயன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

➡➡➡பெற்றோர்களே..👇👇👇

🛑வீடுகளில் தொட்டில் மற்றும் ஊஞ்சல் கட்டும் போது அதீத கவனத்துடன் இருங்கள், உங்கள் பிஞ்சுகளின் பாதுகாப்பில் எப்போதும் விழிப்புடன் இருங்கள்.

🛑தினமும் குழந்தையைத் தொட்டிலில் அல்லது ஏணையில் இடுவதற்கு முன்பாகக் கயிறுகளின் முடிச்சுகள் (Knots) மற்றும் தாங்கும் கட்டிகளின் பலத்தை ஒருமுறை பரிசோதிப்பது இத்தகைய எதிர்பாராத விபத்துகளைத் தவிர்க்க உதவும்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x