மாத விலக்கான நாட்களிலும் நவகாந்தன் கடும் தொல்லை!! பிரான்ஸ் பொலிசாரிடம் சரணடைந்த யாழ் குடும்பப் பெண்!! பெற்றோரே அவதானம்!!
கடந்த சில நாட்களுக்கு முன் பேஸ்புக் மூலம் எம்மை தொடர்பு கொண்ட யாழ் உரும்பிராய் பகுதியை பிறப்பிடமாகக் கொண்ட பிரான்ஸ் வாழ் குடும்பஸ்தரான ஜெயபாலன் நவகாந்தன் என்பவர், தான் திருமணம் செய்து தனது மனைவியை கடந்த வருட நவம்பர் மாதம் பிரான்சிற்கு அழைத்து வந்ததாகவும் அவள் தற்போது தன்னை விட்டுப் பிரிந்து பொலிசாரிடம் சென்று தனிமையில் வாழப் போவதாக கூறி தன்னை ஏமாற்றியுள்ளதாகவும் தெரிவித்ததுடன் தனது மனைவியின் புகைப்படங்கள் மனைவியின் பெற்றோரின் புகைப்படங்கள் போன்றவற்றையும் பிரான்ஸ் பொலிசாரால் தனக்கு கொடுக்கப்பட்ட எச்சரிக்கை ஆவணங்கள் போன்றவற்றையும் ஆதாரங்களாக எமக்கு அனுப்பியிருந்தார்.
நவகாந்தனின் வயது மற்றும் குறித்த பெண்ணின் தோற்றம் போன்றவற்றை புகைப்படம் ஊடாக அவதானித்து, இது தொடர்பாக நாம் மேலும் விசாரணை செய்த போது ஏற்கனவே தான் திருமணம் ஆகி விவாகரத்து செய்தவன் எனவும் தனது வயது 43 எனவும் தற்போதைய மனைவியின் வயது 27 எனவும் எமக்கு தெரிவித்திருந்தார். முதல் மனைவிக்கு ஏற்கனவே காதலன் இருந்தது தெரியாது திருமணம் செய்ததால் அவள் தன்னை விட்டுவிட்டு காதலனுடன் ஓடிவிட்டதாகவும் கூறினார்.
அவர் தொடர்ச்சியாக, தன்னைப் போல் மேலும் பல இளைஞர்கள் ஏமாறக்கூடாது எனவும் அதனால் தன்னை ஏமாற்றிய மனைவி மற்றும் பெற்றோரின் புகைப்படங்களை ஊடகத்தில் வெளியிடுமாறு தெரிவித்துக் கொண்டிருந்தார்.இது தொடர்பாக பிரான்சில் உள்ள எமது ஊடக நட்புக்கள் விசாரணை செய்த போது அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
யாழ் தீவகப் பகுதியைச் சேர்ந்த 25 வயதான யுவதியை நவகாந்தன் திருமணத் தரகர்கள் மூலமாகவே 2ம் தாரமாக திருமணம் செய்துள்ளார். இவர் 2ம் தாரம் என்பது யுவதியின் பெற்றோருக்கும் தெரிந்துள்ளது. தனது முதல் மனைவி ஏற்கனவே காதல் தொடர்பில் இருந்துள்ளது தான் திருமணம் முடித்ததாகவும் அதன் பின்னர் அவள் ஓரிரு வருடங்களில் காதலனுடன் ஓடிவிட்டதாகவும் கூறியே குறித்த தீவக யுவதியை திருமணம் முடித்திருந்தார்.
2025ம் ஆண்டு கொழும்பில் திருமணம் நடந்து 2ம் தாரமாக பிரானஸ் வந்த யுவதியை நவகாந்தன் Rennes எனப்படும் மேற்கு பிரான்சில் உள்ள கிராமப் பகுதியில் உள்ள தனது வீட்டில் அடைத்து வைத்திருந்து கடும் பாலியல் சித்திரவதை செய்து வந்ததாக தெரியவருகின்றது. அப்பகுதி தமிழர்கள் அதிகம் வாழாத பகுதியாகும். ஏற்கனவே பாரிஸ் La Courneuve வில் முதல் மனைவியுடன் வசித்து வந்த நவகாந்தன், தனது முதல் மனைவி தன்னை விட்டு பிரிவதற்கு அவளது பிரான்ஸ் வாழ் நட்புக்களே காரணம் என அறிந்து, குறித்த பகுதிக்கு சென்று Carrossier ஆக தொழில் புரிந்து வந்துள்ளதாகத் தெரியவருகின்றது.
இரண்டாவது மனைவியை எந்த ஒரு இடத்திற்கும் செல்ல விடாது தனது வீட்டில் அடிமையாக வைத்திருந்த நவகாந்தன் வீடு முழுவதும் CCTV பூட்டி கண்காணித்து வந்ததுடன் வீட்டில் மனைவி கைத்தொலைபேசி பாவிப்பதையும் தடை செய்திருந்தார்.
நவகாந்தன் வீட்டில் இல்லாத நேரத்தில் அவர் வேலை பார்க்கும் Carrosserie வாடிக்கையாளர் ஒருவர் அவரது வீட்டுக்குச் சென்று தனது வாகனம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள முற்பட்ட போதே அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த மனைவி தனது நிலையை அவருக்கு கூறி அழுதுள்ளார். அவர் கூறிய மொழி தெரியாது இதனையடுத்து அவர் பொலிசாருக்கு முறையிட்ட போது அங்கு வந்த பொலிசார் மனைவியை மீட்டுள்ளார்கள்.
பொலிசாரிடம் மனைவி கொடுது்த வாக்குமூலத்தில் நவகாந்தன் Avanafil எனப்படும் பாலியல் அதிகரிப்பதற்கான போதைப்பொருளுக்கு அடிமை எனவும் வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்பும் கணவன் அதைப் பாவித்த பின் தன்னை கடுமையான முறையில் பாலியல் ரீதியில் சித்திரவதை செய்வதாக கூறியதுடன் மாத விலக்கான நேரங்களில் கூட வாய்மூலமான புணர்ச்சிக்கு தன்னை உள்ளாக்குவதாகவும் அவ்வாறு மறுத்தால் தன்னை கடுமையாகத் தாக்குவதுடன் கட்டி வைத்து தொடைப் பகுதிகளில் பிளேற்றால் கீறுவதாகவும் கூறியுள்ளார். அதற்கான ஆதாரங்களையும் காட்டியிருந்தார்.குறித்த போதை மருந்துகள் மற்றும் பாலியல் அதிகரிப்பு ஜெல் வகைகள் மற்றும் ஒன்லைன் மூலமாக வரவழைக்கப்பட்ட அடையாளம் தெரியாத சீன நாட்டு மருநதுப் பொருட்கள் போன்றவற்றை பொலிசார் நவகாந்தனின் வீட்டில் கைப்பற்றியிருந்தார்கள். அத்துடன் மார்பு , தொடை மற்றும் பெண் உறுப்பு பகுதிகளில் காணப்பட்ட காயங்கள் மற்றும் மலவாசல் பகுதியில் காணப்பட்ட காயங்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு பிரான்ஸ் பொலிசார் நவகாந்தனைக் கைது செய்து விளக்கமறியலில் வைத்திருந்து விடுவித்துள்ளதுடன் மனைவியின் வீட்டுப் பக்கம் செல்லக்கூடாது என கூறி நீண்ட கால தடையையும் விதித்துள்ளார்க்ள. மனைவி தற்போது பிரான்ஸ் அரசின் பராமரிப்பில் வாழ்ந்து வருகின்றார். தற்போது அவள் 4 மாத கர்ப்பிணியாக உள்ளதாகவும் தெரியவருகின்றது.
அத்துடன் குறித்த குடும்பப் பெண் இலங்கை திரும்பிச் செல்லப் போவதாக பிரான்ஸ் பொலிசாருக்கு தெரிவித்துள்ளதுடன் அதற்கான செயற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளார்.
இவற்றையெல்லாம் அறிந்த பின் எமது ஊடகச் செயற்பாட்டாளர்கள் நவகாந்தனை தொடர்பு கொண்டு குறித்த சித்திரவதைகள் தொடர்பாக விசாரணை செய்ய முற்பட்ட போது ”என்ன புறோ… கலியாணம் கட்டுறது இதுக்குத்தானே.. நீங்கள் எல்லாம் இப்படி செய்யாமலோ இருக்கிறீங்கள் என தொடங்கி பின்னர் கடும் கடுப்பாகி பச்சை துாசணத்தில் எமது ஊடகச் செயற்பாட்டாளரை ஏசும் ஓடியோவை இங்கு இணைத்துள்ளோம்….
பெற்றோர்களே.. உங்களது அழகான பெண்பிள்ளைகளை சிறுவயதிலிருந்து வளர்த்து ஆளாக்கி இவ்வாறான கொடூர மிருகங்களுக்கு பலியாக்குவதற்கு முன் பல தடவைகள் யோசியுங்கள்….

