புதினங்களின் சங்கமம்

மசாஜ் செய்வதாக அறைக்குள் அழைத்து அவர்களுடன் பாலியல் உறவு கொண்டு அதனை இரகசியமாக வீடியோ எடுத்து புலம்பெயர்ந்தவர்களுக்கு அனுப்பிய கில்லாடிகள் கைது! தமிழர் பகுதியில் சம்பவம்!

பதுளை பண்டாரவளைப் பகுதியில் உள்ள ஒரு ஸ்பா (spa) மையத்தில், வாடிக்கையாளர்களின் பாலியல் நடவடிக்கைகளை ரகசியமாகப் படம்பிடித்து விற்பனை செய்யும் சட்டவிரோதச் செயல்பாடு ஒன்று பொலிஸ் சோதனையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

எல்லபகுதியில் இயங்கி வந்த இந்த ஸ்பா மையத்தில் இச்சமபவம் இடம்பெற்றுள்ளது. சேவையைப் பெற விரும்பும் வாடிக்கையாளர் போல வேடமணிந்த சென்று சட்டவிரோதச் செயல்பாட்டை பொலிஸார் கண்டு பிடித்துள்ளனர்.

4,000 முதல் 8,000 ரூபாய் வரையிலான கட்டணம்
இந்தச் சட்டவிரோதச் செயலை முன்னெடுத்த முக்கிய சந்தேக நபர்களாக, வெலிமடைப் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒரு ஆணும், மினுவாங்கொடப் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒரு பெண்ணும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அங்குள்ள அறைகளில் தந்திரமாகப் பொருத்தப்பட்ட கேமராக்கள் மூலம் வாடிக்கையாளர்களின் பாலியல் நடவடிக்கைகளைப் படம்பிடித்து, அவற்றை வெளிநாட்டுத் தரப்பினருக்குப் பணம் பெற்றுக்கொண்டு விற்பனை செய்ததை விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளன.

வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கும் பெண்ணைப் பொறுத்து 4,000 முதல் 8,000 ரூபாய் வரையிலான கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு, விபச்சாரம் மற்றும் பாலியல் காணொளி விற்பனைச் செயல்பாடு நடத்தப்பட்டு வந்துள்ளது.

சந்தேகத்திற்குரிய ஜோடியைத் தவிர, ஜா-எல, மினுவாங்கொட, மாத்தளை மற்றும் வெலிமடைப் பகுதிகளைச் சேர்ந்த 18 முதல் 40 வயதுக்குட்பட்ட நான்கு பெண்கள் மற்றும் மற்றொரு நபர் ஆகியோரும் இந்தச் சோதனையின் போது பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பாலியல் ரீதியாகப் பரவும் நோய்கள் குறித்த மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், அவர்களின் அலைபேசிகள் மேலதிக விசாரணைகளுக்காகக் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

உவா மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனாரத்ன, பிரதிப் பொலிஸ் மா அதிபர் லக்ஸிரி விஜேரத்ன, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மயூர பெரேரா மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் பெர்னாண்டோ ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், பண்டாரவளைப் பிரிவு விசேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி (OIC) பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த குணதிலக தலைமையிலான பொலிஸ் குழுவினால் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x