புதினங்களின் சங்கமம்

லண்டனிலிருந்து யாழ் வந்த கணவன் கள்ள தொடர்பு!! 40 பவுண் நகைகள் மாயம்!! மனைவி கிணற்றுக்குள் பாய்ந்தார்!!

லண்டனிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்த 33 வயதான குடும்பப் பெண் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு காப்பாற்றப்பட்டுள்ளார். தனது சகோதரியின் மகளின் பூப்புனித நீராட்டு விழாவுக்கு வந்த போதே இச் சம்பவம் இடம்பற்றுள்ளது. பெறாமகளின் பூப்புனித நீராட்டு விழாவில் கலந்து கொண்ட பின் அன்று மாலை அவர்கள் தங்கியிருந்த வீட்டில் கழற்றி வைத்திருந்த மனைவியின் 40 பவுண் நகைகள் காணாமல் போயுள்ளது. கழற்றி வைத்திருந்த நகைகளை அடுத்த நாள் எடுக்கச் சென்ற போது அங்கு தான் வைத்தி இடத்தில் இருந்து நகைகள் காணாமல் குறித்த பெண் அதிர்ச்சியடைந்துள்ளார். தங்கியிருந்த வீட்டில் கணவனை விட்டுவிட்டே மனைவி தனது சகோதரியின் வீட்டில் தனது இரு பிள்ளைகளுடன் சம்பவ தினம் இரவு நின்றுள்ளார், இவர்கள் தங்கியிருந்த வீடு புலம்பெயர் நாட்டில் வாழும் இவர்களது நெருங்கிய உறவினர்களின் வீடு. வீட்டைச் சுற்றி CCTV பூட்டப்பட்டிருந்துள்ளது. நகைகள் காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த பெண்ணும் உறவுகளும் கணவனிடம் விசாரித்த போது கணவன் தனக்கு எதுவுமே தெரியாது என கூறியபடி நின்றுள்ளார். இதனையடுத்து குறித்த வீட்டின் CCTV காட்சிகளை பரிசோதனை செய்த போது மனைவியும் பிள்ளைகளும் வீட்டிலிருந்து வெளியேறி சிறுது நேரத்தில் CCTV துண்டிக்கபட்டிருப்பது தெரியவந்தது. அதன் பின் அடுத்தநாள் காலை 7 மணியளவிலேயே CCTV மீண்டும் வேலை செய்யத் தொடங்கியுள்ளது. இதனால் கணவன் மீது மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அயல் வீட்டில் பூட்டியிருந்த CCTV காட்சிகளை பரிசோதித்த போது புத்தம் புதிய மின்சார மோட்டார் சைக்கிளில் குறித்த வீட்டுக்கு மாலை வேளையில் வந்த பெண் ஒருவரை கணவன் வாசலில் வந்து உள்ளே கூட்டிச் செல்வது அவதானிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் அடுத்த நாள் காலை 5 மணியளவில் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வெளியேறுவதும் அப் பெண்ணை கணவனே கேற்றைத் திறந்து வெளியேற்றுவதும் அவதானிக்கப்பட்டுள்ளது. இதனைப் பார்த்து அறிந்த மனைவி அங்கிருந்து வெளியேறி தான் தங்கியிருந்த வீட்டுக் கிணற்றுக்குள் குதித்துள்ளார். அவரின் பின்னால் வந்த உறவுகளால் அவர் உடனடியாகக் காப்பாற்றப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

கணவனிடம் வந்து சென்ற பெண்ணும் மனைவியின் நெருங்கிய உறவினர் என்பதும் அப் பெண்ணே நகைகளைக் களவாடியுள்ளார் என்பதும் அறியவந்துள்ளதுடன் தற்போது குறித்த பெண்ணிடம் மனைவியின் உறவுகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள் எனவும் பெண் தான் நகைகளை எடுக்கவில்லை என மறுத்து வருவதால் தற்போது அவரை பொலிசாரிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் மனைவியின் உறவுகள் தெரிவிக்கின்றனர்.

இதே வேளை மனைவி கிணற்றில் விழுந்து மீட்கப்படும்வரை அங்கு நின்றிருந்த கணவன் தான் கையும் மெய்யுமாக பிடிபட்ட அச்சத்தில் மீண்டும் லண்டன் செல்வதற்காக மனைவி பிள்ளைகளை விட்டுவிட்டு தற்போது கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும் அவரிடம் விசாரணைகளை மேற்கொள்ள முடியாதுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றார்கள்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x