புதினங்களின் சங்கமம்

”உனக்கு துப்பாக்கி துாக்கி சுடத் தெரியுமா”? பொலிசாரின் துவக்கைப் பறித்து எப்படி சுடுவது என பொலிசாருக்கே வகுப்பெடுத்த முன்னாள் புலி உறுப்பினர் கைது!! நடந்தது என்ன?

அம்பாறை கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திரவந்தியமோடு பகுதியில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு செய்து துப்பாக்கியை பறிக்க முயன்ற சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணை மேற்கொள்ளப்படுகின்றது.

119 கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய சம்பவ தினமான இரவு கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இருந்து சார்ஜன்ட் தர அதிகாரி உட்பட கான்ஸ்டபிள் ஒருவரும் மோட்டார் சைக்கிளில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

பொலிஸாரின் துப்பாக்கியை பறித்து வகுப்பெடுத்தவர் தொடர்பில் விசாரணை; தமிழர் பகுதியில் சம்பவம் | Man Snatches Police Officer Gun Kalmunai

பொலிஸாருக்கு அச்சுறுருத்தல்

இதன் போது பிரதான சந்தேக நபர் பொலிஸாரை அச்சுறுத்தி அவர்களை காயப்படுத்தியதுடன் துப்பாக்கியையும் கடமை நேரத்தில் பறிக்க முற்பட்டிருந்தார்.

இதன் போது அவ்விடத்திற்கு மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டு சந்தேக நபர் பறித்த துப்பாக்கி மீட்கப்பட்டதுடன் காயமடைந்த பொலிஸார் கல்முனை பகுதியில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதன் போது தலைமறைவான சந்தேக நபர் உடனடியாக கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.

அவ்வேளை சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணையின் போது 2000 ஆண்டு தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டதாகவும் 2004 ஆண்டு விலகி வந்ததாக குறிப்பிட்டதாக தெரிவித்துள்ளார்.

சம்பவ தினத்தின் போது குடிபோதையில் இருந்த சந்தேக நபர் பொலிஸாரின் துப்பாக்கியை பறித்து அதை லோட் செய்து துப்பாக்கியை எப்படி இயக்குவது என்று பாடம் எடுத்ததுடன் உங்களுக்கு யார் பயிற்சி தந்தார்கள் என ஏளனத்துடன் பொலிஸாரை வினவியதாக கூறப்படுகின்றது.

மேலும் கைதான சந்தேக நபர் 44 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளவர் என தெரிவித்த பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x