புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணத்தில் தங்கச்சியை பிரான்ஸ் அங்கிளுக்கு கட்டிவைக்க பார்க்கும் Real Life வீரபாகு!

இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்

லக்சி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), யாழ்ப்பாணத்தில் இடைநிலை அரச ஊழியராக பணிபுரிகிறார். 26 வயதாகும் அவர், தாய் தந்தை அண்ணா மற்றும் தங்கையுடன் சுன்னாகத்தில் வசித்து வருகிறார்.

இவருக்கு திருமணத்திற்கு வரன் பார்க்கப்பட்டு வந்த நிலையில் புரோக்கர் ஒருவரினால் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 48 வயதுடையவரின் குறிப்பு ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. மாப்பிள்ளையின் வயது காரணமாக லக்சி அவ் மாப்பிள்ளையை நிராகரித்துள்ளார்.

எனினும், லக்சியின் சாதக குறிப்புடன் அவரின் புகைப்படமும் மாப்பிள்ளைக்கு பகிரப்பட்ட நிலையில், அவர் லக்சியின் அழகில் மயங்கி அவளை தான் கட்டுவது என்று உறுதிபூண்டுள்ளார். ஆனால் லக்சியின் நிராகரிப்பை அறிந்ததும் அதிர்ச்சிக்கு உள்ளாகினார்.

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் கதை போல், சமூகவலைத்தளங்களில் தேடி லக்சியின் அண்ணாவின் தொடர்பை எடுத்துள்ளார்.

அண்ணாவிடம், தான் லக்சியை விரும்புவதாகவும், திருமணம் நடைபெற்றால் அவரை பிரான்ஸ் க்கு எடுப்பதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

அந்த டீலிங் அவருக்கு பிடித்துப் போகவே, தனது தாயிடமும் கூறியுள்ளார்.

தற்போது அண்ணனும், தாயும் சேர்ந்து, குறித்த வயதான மாப்பிள்ளையை கட்டுமாறு லக்சிக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்களாம்.

சொந்த அண்ணனே, தனது சுய லாபத்துக்காக தனது வாழ்க்கையை அழிக்கப் பார்ப்பதாக தனது தோழியிடம் வருந்தியுள்ளார் லக்சி.

தோழியின் காதலன் மூலம் குறித்த செய்தி வெளியே வந்துள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x