புதினங்களின் சங்கமம்

யாழில் செருப்பு மாலை அணிவித்தபடி காணப்பட்ட பைத்தியர் அர்ச்சுனாவின் 10 அடி கட்டவுட்!! பாய்ந்து வந்து கிழித்துச் சென்ற பைத்தியர்!! பரபரப்பு வீடியோ

யாழில். தனது பாதகைக்கு செருப்பு மாலை அணிவித்ருந்த பதாகையை கிழித்து , தனது காரில் எடுத்து சென்றுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் பைத்தியர் அருச்சுனா இராமநாதன்.

யாழ்ப்பாண நகரை அண்டிய பிரதான வீதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை பைத்தியர் அருச்சுனா இராமநாதனின் 10 அடி உயர பதாகை வைக்கப்பட்டு , அதற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் தகாத வார்த்தை பிரயோகங்கள் , சபை நாகரீகமின்றி செயற்படுதல் , கூட்டங்களை குழப்புதல் போன்ற செயல்களில் அருச்சுனா இராமநாதன் செயற்பட்டு வருவதாக பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு வரும் நிலையில் , நேற்றைய தினம் இடம்பெற்ற தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் மிக மோசமான வார்த்தை பிரயோகத்தில் ஈடுபட்டு இருந்தமை தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி கடும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறான நிலையில் , அருச்சுனாவின் 10 அடி உயர பதாகைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு , பிரதான வீதியில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் காலை 10 மணியளவில் பதாகை வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு தனது காரில் வந்த அருச்சுனா இராமநாதன் , பதாகையை கிழித்தெடுத்து , தனது காரில் எடுத்து சென்றுள்ளார்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x