புதினங்களின் சங்கமம்

மட்டு’வில் கலியாண வீட்டுக்குச் சென்று திரும்பிய 11 தமிழர்களுக்கு நடந்த கதி!

மட்டக்களப்பு பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தவர்களை ஏற்றிச் சென்ற வேன் சாலையை விட்டு விலகி மரத்தில் மோதியதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

மன்னம்பிட்டிய மகாவெவ கவன்குவ பகுதியிலில் இடம்பெற்ற இவ்விபத்து இடம்பெற்றது. பொதுமக்கள், பொலிஸார் சேர்ந்து இவர்களை உடனடியாக பொலனறுவை மற்றும் மன்னம்பிட்டிய வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

09 பேர் பொலனறுவை வைத்தியசாலையிலும், இருவர் மன்னம்பிட்டிய பிரதேச வைத்தியசாலையிலும் சிகிச்சை பெறுகின்றனர். காயம் அடைந்தவர்களில் 09 வயது சிறுமியும் உள்ளார்

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x