கிளிநொச்சி முரசுமோட்டையில் முதியவரை நசுக்கி கொன்ற யானை!!
கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் இன்று இரவு காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீட்டில் ஆழ்ந்த உறக்கத்தில் முதியவர் இருந்தவேளை குறித்த வீட்டுக்குள் திடீரென புகுந்த யானை அவரை தாக்கியது இதனால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் 74 வயது முதியவரே உயிரிழந்தவராவார். சம்பவம் தொடர்பில் கெண்டாவளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் சடலம் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் உள்ளது.

