புதினங்களின் சங்கமம்

அம்பாறையில் பெற்ற தாயின் ஈனச் செயல்! ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த 14 வயது மகளின் கைகளை பிடித்து வைத்திருந்து 51 வயது கள்ள காதலனுக்கு இரையாக்கினாள்!

கட்டிலில் தன்னுடன் நித்திரை செய்த மகளை துஸ்பிரயோகம் செய்த தாய் மற்றும் கள்ளக்காதலனுக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

பாறுக் ஷிஹான்

கட்டிலில் தன்னுடன் நித்திரை செய்த மகளை கள்ளக்காதலனுடன் இணைந்து பலாத்காரமாக வாயை மூடி துஸ்பிரயோகம் செய்தமைக்காக தாய் மற்றும் கள்ளக்காதலனான சந்தேக நபர் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனை பகுதியில் 2026.03.24 அன்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.அத்துடன் 3 மாத காலமாக தலைமைறைவாகி இருந்த சந்தேக நபர் உட்பட சிறுமியின் தாய் ஆகியோர் கைது செய்யப்பட்டு கல்முனை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போது 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

50 வயது சந்தேக நபர் சமூக வலைத்தளங்கள் ஊடாக (IMO /WHATAPPS ) ஊடாக திருமணமான பெண் ஒருவருடன் தொடர்பினை மேற்கொண்டுள்ளார்.அப்பெண் தம்புள்ளை கலேவலை பகுதியைச் சேர்ந்தவராவார்.அப்பெண்ணிற்கு 2 பிள்ளைகள். ஆண் 18 மற்றும் 14 வயதுடைய பெண் இருக்கின்றனர்.இதன் போது அப்பெண் சமூக வலைத்தளம் ஊடாக தொடர்பு கொண்டு தனது 14 வயது பிள்ளையை தன்னுடன் அழைத்துக்கொண்டு அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனை பகுதிக்கு சென்றுள்ளார்.

அங்கு சந்தேக நபரான 50 வயது சந்தேக நபரான கள்ளக்காதலனை சந்தித்துள்ளார்.இதன்போது குறித்த தாயும் பிள்ளையும் தங்குவதற்காக வாடகைக்கு வீடு ஒன்று கிராம சேவகரின் உதவி ஊடாக பெறப்பட்டு அங்கு தங்கி இருந்துள்ளனர்.

குறித்த வாடகை வீட்டில் உள்ள ஒரு கட்டிலில் குறித்த மூவரும் உறங்கியதுடன் அவ்வேளை தாயுடன் கள்ளக்காதலன் உடலுறவில் நள்ளிரவில் ஈடுபட்டுள்ளார்.பின்னர் ஒரு சில மணித்தியாலங்களின் பின்னர் அருகில் இருந்த 14 வயது சிறுமியுடன் உடலுறவில் ஈடுபட்டிருந்தார்.இதன்போது அச்சிறுமி அபயக்குரல் எழுப்பி கத்தியபோது தாய் உடனடியாக செயற்பட்டு சிறுமியின் வாயினை பலவந்தமாக மூடியதுடன் கள்ளக்காதலனுக்கு ஒத்தாசை செய்துள்ளதாக அம்முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டிற்கமைய செயற்பட்ட பொலிஸார் சுமார் 3 மாதங்களின் பின்னர் தலைமைறைவாகி இருந்த 50 வயதான சந்தேக நபரை வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள ஆலங்குளம் பகுதியில் 03.06.2026 அன்று கைது செய்துள்ளனர்.

பின்னர் தொடர் விசாரணையின் பிரதான சந்தேக நபரான கள்ளக்காதலன் உட்பட குறித்த செயற்பாட்டிற்கு கள்ளக்காதலனுக்கு உடந்தையாக இருந்த தாய் ஆகியோரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் வழிகாட்டலில் கல்முனை பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரி தலைமையில் செயற்பட்ட கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொறுப்பதிகாரி திருமதி எஸ்.பி.என்.எம். சுவர்ணகாந்தி, உப பொலிஸ் பரிசோதகர் குமாரசிங்க, கல்முனை பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொலிஸ் ஷார்ஜன் ஏ. ஆதம்பாவா(44138) மற்றும் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி வெளி மாவட்டம் ஒன்றில் உள்ள பாதுகாப்பான சிறுவர் நன்னடத்தை நிலையம் ஒன்றில் வைத்திய பரிசோதனைக்காக தங்க வைக்கப்பட்டுள்ளார். என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x