புதினங்களின் சங்கமம்

கொழும்பு வெசாக் பந்தலுக்குள் புகுந்த வாகனம்! 6 பேர் பலி! பலர் படுகாயம்!

கொழும்பு மாவட்டத்தின் மீகொட சந்திப் பகுதியில் அமைந்திருந்த வெசாக் தானசாலை அருகே மக்கள் கூட்டத்துக்குள் கப் ரக வாகனம் ஒன்று புகுந்து மோதியதில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹேகாம – மீகொட பகுதியில் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த கப் ரக வாகனம் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து, வெசாக் தானசாலை அருகே வரிசையில் நின்றிருந்த மக்கள் மீது மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தை ஏற்படுத்திய பின்னர் சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாகவும், பின்னர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த குறைந்தது 12 பேர் ஹேகாம தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 3 பெண்கள் உட்பட 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x