இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தொடரும் இலஞ்ச #ஊழல்!!
நேற்று நடந்த சம்பவம்(05) – ஐரோப்பா நாடு ஒன்றில் குடியுரிமை பெற்ற ஒருவர் இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் [பெண்] விடுமுறையில் இலங்கை வந்து ஒரு மாத காலமாக தங்கி நின்ற பின்னர் நேற்றைய தினம் 5.05.2026, மீண்டும் ஐரோப்பா நாட்டிற்கு புறப்பட தயாராகி அதற்குரிய சகல ஆயத்தங்களுடன் பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையம் சென்றிருந்தார்.
அவருக்கான பயண விமான சீட்டு விமானம் புறப்படும் நேரம் அதிகாலை 02.05, தூயாய் EK649,[விமனம் எமேரேட்ஸ்] ஊடாக பயண ஏற்பாடு இருந்தது.
பொதி சோதனை நிறைவு செய்து குடியகல்வு அதிகரி [immigration] இறுதி கட்ட சோதனையின் போது அனைத்துவிதமான ஆவனங்களும் இருந்தும் பயணிக்க வேண்டிய அந்த தமிழ் பெண்ணிடம் சரளமாக தமிழில் உரையாடி தங்கள் ஆவணத்தில் குறைபாடு இருப்பதாகவும் தாங்கள் குறித்த விமானத்தில் செல்ல முடியாது என கூறி தாமதப்படுத்தினார்.
அந்த பெண் இல்லை தனது ஆவனங்கள் சரியானதே எனவும் இதே போல் தான் இலங்கைக்கு இங்கே வந்தேன் என தர்க்கப்பட்டுள்ளார்.
இருந்தும் அந்த அதிகரி தனது மேலதிகரியிடம் பேச வேண்டும் காலதாமதம் ஏற்படும் என தொடர்ந்து இழுபறி ஏற்பட ஒரு கட்டத்தில் அந்த அதிகரி [குள்ளமானவர் அவர் கடமை நேரம் அதிகாலை 12.20 மணி 06.05.2026,] எழுந்து சற்று மறைவாக சென்று மீண்டும் வந்து அதிகரியிடம் பேசியதாகவும் 90 யூரோ தருமாறு கேட்டுள்ளார்.
அந்த பெண் அதற்கு சம்மதிக்க வில்லை! நேரம் செல்ல செல்ல இறுதியில் தனது கையில் இருந்த 50 யூரோவை அந்த அசிகாரியின் கையில் செலுத்திய பின்னரான பின் பயண அனுமதி கிடைத்ததாக கூறி அனுமதித்திருந்ததாக பாதிக்கப்பட்ட பெண் கவலையுடன் தெரிவித்துள்ள சம்பவம் ஒன்றே நேற்றைய தினம் கட்டுநாயக்கா சர்வதேச விமானநிலையத்தில் பதிவாகியுள்ளது!
இலஞ்ச ஊழலை ஒழிப்போம் என அறைகூவிக் கொண்டு ஆட்சிப்பீடம் ஏறியவர்கள் இவ்வாறான இலஞ்சங்கள்,ஊழல்களை ஊக்குவிக்கிறார்களா எனவும் குறித்த பாதிக்கப்பட்ட பெண் தரப்பினர் குழம்பியவாறு நாடு திரும்பியுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.





