தனது 14 வயது மகளை தனது கள்ளக்காதலனுடன் படுக்க வைத்து பார்த்துக் கொண்டிருந்த குடும்பப் பெண் அயலவர்களால் பிடிக்கப்பட்டாள்!
பதவிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தனது கள்ளக்காதலன் மூலம் மகள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதை மறைத்து, அதற்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் தாய் கைது செய்யப்பட்டு, எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த தகவலை குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள் பொலிஸாருக்கு அறிவித்ததைத் தொடர்ந்து, சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அதில் துஷ்பிரயோகம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளில், குற்றச்சாட்டுக்கு உட்பட்ட நபர் மூன்று பிள்ளைகளின் தந்தை என்றும், அவர் சிறுமியின் தாயுடன் கள்ளத்தொடர்பில் இருந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் வழங்கிய தகவல்களும் விசாரணைக்கு ஆதாரமாக அமைந்துள்ளன.
இதுவரை குறித்த சந்தேகநபர் கைது செய்யப்படாத நிலையில், அவர் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரை கைது செய்ய தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மற்றபுறம், தனது மகளுக்கு நேர்ந்த அநீதியை மறைத்து, குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் தாயை பதவிய பொலிஸார் கைது செய்து, நேற்று (05) கெபித்திகொல்லேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினர். அதன் பின்னர், அவரை 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பின்னர், தற்போது பொலிஸார் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
சிறுமியின் எதிர்கால பாதுகாப்பு குறித்து நீதிமன்றத்தில் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

