புதினங்களின் சங்கமம்

யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த இரு காவாலிகளும் பச்சைக் கள்ளர்கள்! நடந்தது என்ன?

யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் இன்று அதிகாலை விஜயின் வெற்றிக்கு வெடிகொழுத்த சென்ற போது நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு காவாலிகள் உயிரிழந்துள்ளனர். பருத்தித்துறை வீதி, கோப்பாய் நாவற்கட்டைப் பகுதிaில் இன்று (05.05.2026) அதிகாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதி வேகமாகச் சென்று கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியோரத்திலிருந்த வீட்டின் மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த காவாலிகள் இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். சிவநேசன் குஜிந்தன் (22 வயது) – நெல்லியடி பகுதியைச் சேர்ந்தவர். ஏழுமலை துஷாந்தன் (24 வயது) – நெல்லியடி பகுதியைச் சேர்ந்தவர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்கள் கரவெட்டி மற்றும் நெல்லியடி பகுதிகளின் கடை உடைத்து திருடியது மற்றும் வீடு ஒன்றில் டொலர் திருடிய குற்றசெயல்கலுடன் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.