அனுராதபுர மாணவன் மனதை நெகிழிச்சியுறும் செயல்பாடு !!! (Photos)
அனுராதபுர பாடசாலை மாணவன் தரையில் ஒன்றரை இலட்சம் பெறுமதியான தங்க ஆபரணங்களை போலிஸ் நிலையத்தில் ஒப்படத்தமை மூலம் மக்களிடையே பாராட்டையும் அபிமானத்தை பெற்றுள்ளார்!!
அனுராதபுரத்தில் உள்ள கலென்பிந்துநுவேவா கிராமத்திலுள்ள மகஸ்வேவா மகா வித்யாலயா தரம் 11 இன் மாணவர் ஆயுத வைத்தியசாலை எதிரேயுள்ள வீதியின் அருகே தரையில் கிடந்த தங்க ஆபரணங்களை கண்டெடுத்து அவற்றை, அவர்கள் கலன்பிந்துநுவேவா காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
தங்கக் குழுவின் மதிப்பு 150000 ரூபாய் என்றும் அதன் உரிமையாளர் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கலென்பிந்துநுவேவா போலீசார் கூறுகின்றனர்,
தமது போலிஸ் நிலையத்தை தேடி பெரும்பாலும் போதைப்பொருள் பாவனை அடிதடி என நாளாந்தம் குற்றச்செயலுடன் வரும் மாணவ சமுகமத்தியில் இம்மாணவன் தமது கையில் கிடைத்த ஆபரணத்தை உரியவரிடம் ஒப்படைக்க போலிஸ்நிலையத்தை தேடிச்சென்று கொடுத்தமை தமக்கு விசித்திரமாக உள்ளதாகவும் இம்மாணவனின் பெற்றோரின் வளர்ப்பை பெருமைபடுத்துவதாக போலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஒரு மாணவனால் கல்வியில் அதிகபெறுபேறு பெறுவது மாத்திரம் பெறுமையல்ல இதுபோன்ற நேர்மையான நடத்தைகளும் பெற்றோருக்கு பெருமைபடுத்தும்.





