புதினங்களின் சங்கமம்

ஜனாதிபதி தேர்தல் – கட்டுப்பணம் செலுத்தியோர் விபரம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக இதுவரை 8 வேட்பாளர்கள் தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அந்தவகையில் கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களில், ஐந்து பேர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், மூன்று பேர் சுயேட்சை வேட்பாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,

டொக்டர் அஜந்த பெரேரா – சோஷலிச கட்சி

பிரசன்ன பெரேரா – அபே ஜன பாலய கட்சி

கோட்டாபய ராஜபக்ஷ – பொதுஜன பெரமுன

அரியவன்ச திசநாயக்க – ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி

சிறீதுங்க ஜெயசூரிர்ய – ஐக்கிய சோஷலிச கட்சி

சுயேட்சை வேட்பாளர்கள்

அபரகே புண்யானந்த தேரர்

ஜெயந்த கேதகோட

சிறிபால அமரசிங்க

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 16 ம் திகதி நடைபெற உள்ளது, அதே நேரத்தில் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதி திகதி ஒக்டோபர் 7 ஆம் திகதி என்பது குறிப்பிடத்தக்கது.