Home புதினங்களின் சங்கமம் வவுனியாவில் பொதுவெளியில் இளைஞன் மீது பொலிஸார் தாக்குதல்!

வவுனியாவில் பொதுவெளியில் இளைஞன் மீது பொலிஸார் தாக்குதல்!

?????????????????????????????????????????????????????????

வவுனியா நகரில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது, இளைஞர் ஒருவரை பொலிஸார் மிக மோசமான முறையில் தாக்கி காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள நிலையில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

வவுனியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது, இலங்கை பொலிஸார் ஒரு இளைஞரை கால்களால் எட்டி உதைத்தும், பாதுகாப்பு அங்கிகளைப் பயன்படுத்தியும் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கியுள்ளனர்.

இத்தாக்குதலில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகள் உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட வேண்டும். அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட இளைஞருக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர் .