புதினங்களின் சங்கமம்

மட்டு’வில் வீட்டைச் சுற்றி உயரமான மதில் கட்டி நவீன கமராக்கள் பூட்டிய பின் யுவதி செய்து கொண்டிருந்த செயல்! சுற்றி வளைத்து பிடித்த பொலிசார்!

பொலிஸார் சுற்றிவளைப்புக்கு வரும்போது, ஒளிப்படக்கருவிகள் ஊடாக அதனை அவதானிக்கும் இப்பெண், வீட்டின் கதவுகளைப் பூட்டிவிட்டு உள்ளே யாரும் இல்லாதது போன்ற பாவனையில் நீண்டகாலமாகத் தப்பித்து வந்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்னவின் ஆலோசனையின் கீழ், தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரியந்த பண்டாரவின் வழிகாட்டலில் விசேட குழுவினர் முற்றுகை மேற்கொண்டனர்.

பொலிஸ் உப பரிசோதகர் சந்தன தலைமையிலான குழுவினர், குறித்த வீட்டைத் தந்திரமான முறையில் சுற்றிவளைத்துச் சோதனையிட்டபோதே, 105 போத்தல் கசிப்புடன் இப்பெண் பிடிபட்டார். பெண்ணின் சட்டவிரோதச் செயற்பாடுகள் குறித்துப் பொதுமக்கள் நீண்டகாலமாகப் பொலிஸாரிடம் முறைப்பாடுகளை முன்வைத்து வந்தனர்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவின் எல்லையோரப் பகுதியில் அமைந்துள்ள இவ்வீட்டில் முன்னெடுக்கப்பட்ட சட்டவிரோத வியாபாரம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும் சந்தேகநபரை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான ஏற்பாடுகளைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

May be an image of text that says "vegiel wll M. TEWELLERY PT สซ ප්‍රවලට om එම APRIL (2026) MON 6 132027 TUE 7 142128 WED 1 8 152229 THU 2 9 162330 FRI 3 101724 111825 5082077 3109C WGLGRT-"May be an image of text