புதினங்களின் சங்கமம்

வன்னியில் வனவளதிணைக்கள காவாலி அதிகாரியின் அட்டகாசம்!! நிறை வெறியில் அரச வாகனத்தில் உல்லாசம்!

அரச வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தி மது அருந்தியது மாத்திரமின்றி ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீதும் தாக்குதல் முயற்ச்சி! இடம் தெரியாமல் மோதுகிறாய் என முல்லைத்தீவு மாவட்ட வன அதிகாரிமிரட்டல்  விடுத்த சம்பவமொன்று இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதுஇ
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில் …
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராமத்தில் மாங்குளம் வட்டார வன வள திணைக்கள அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் வசித்து வருகின்றார்
இந்நிலையில் 07.04.2026 இரவு ஏழு மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட வன அதிகாரி உள்ளிட்ட சிலர் Wp PD 3060 நீல நிற கப் ரக வாகனத்திலும் மேலும் சில ஊழியர்கள் wp pF 9868 இலக்கமுடைய வாகனத்திலும் வருகைதந்து குறித்த அதிகாரியின் வீட்டில் மது விருந்தில் ஈடுபட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வன வள திணைக்களத்தினரின் ஆதரவுடன் சட்டவிரோத மணல் அகழ்வு காடழிப்பு செயற்ப்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் நிலையில் இவை அதிகாரிகள் இலஞ்சம் பெற்றுக்கொண்டு செய்வதாக குற்றம் சாட்டுக்கள் முன்வைக்கப்படும் நிலையில் சட்டவிரோத மணல் மாபியாக்கள் மரக்கடத்தல் காரர்களால் இவ்வாறு மது விருந்துகளும் ஏற்ப்பாடு செய்யப்படுவதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் எழும் நிலையில் நேற்று இவ்வாறானதொரு சம்பவம் பதிவாகியுள்ளது.
மது விருந்துக்காக அரச வாகனங்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில் பனிக்கன்குளம் சந்தி பகுதியில் குறித்த இரண்டு வாகனங்களும் சுமார் மூன்றரை மணித்தியாலங்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த இடத்துக்கு ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் அவர்கள் சென்ற போது குறித்த பகுதியில் மதுபோதையில் நின்ற மாவட்ட வன வள திணைக்கள அதிகாரி உள்ளிட்ட குழுவினர் ஊடகவியலாளருடன் முரண்பட்ட தோடு மாத்திரமின்றி மாவட்ட வன வள திணைக்கள அதிகாரி ஊடகவியலாளரை தாக்கமுற்ப்பட்டதோடு இடம் தெரியாமல் மோதுகிறார் எனவும் மிரட்டல் விடுத்தார்.
இந்நிலையில் ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் அவர்களால் அரச வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தி மது அருந்தும் செயற்ப்பாட்டை முன்னெடுத்தது மாத்திரமின்றி ஊடகவியலாளரை தாக்க முற்பட்டு அச்சுறுத்தியமை தொடர்பில் உடனடியாக மாங்குளம் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதோடு அரச வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தி மது அருந்தும் செயற்ப்பாட்டை முன்னெடுத்தது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களுக்கும் ஊடகவியலாளரால் தெரிவிக்கப்பட்டது. இதனைவிட வடமாகாண சிரேஸ்ர பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கும் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பொலிசார் சம்பவ இடத்திற்கு வர தாமதமான நிலையில் குறித்த முல்லைத்தீவு மாவட்ட வன அதிகாரி உள்ளிட்ட குழுவினர் குறித்த பகுதியை விட்டு தப்பிச் சென்றனர்.
இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வருகைதந்த மாங்குளம் பொலிசார் ஊடகவியலாளரை மாங்குளம் பொலிஸ் நிலையம் வந்து முறைப்பாடு பதிவு செய்யுமாறு தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து ஊடகவியலாளர் மாங்குளம் பொலிஸ் நிலையம் சென்றபோதுWP PF 9868 வாகனத்தில் வருகைதந்த வன வள திணைக்கள அதிகாரிகள் பொலிஸ் நிலையம் சென்று ஊடகவியலாளருக்கு எதிராக முறைப்பாடு ஒன்றை பதிவு செய்தனர்.
இவ்வாறான நிலையில் மாங்குளம் பொலிஸ் நிலைய பதவி நிலை அதிகாரி ஒருவர் வன வள திணைக்கள அதிகாரிகளிடம் எதுவுமே பேசாது ஊடகவியலாளரை மாத்திரம் அழைத்து கடும் தொனியில் மிரட்டும் வகையில் தேவையில்லாமல் பிரச்சினைகள் போடக்கூடாது ஊடகவியலாளர் என்றால் எதுவும் செய்வீரோ எனவும் தேவையற்ற வார்த்தைப்பிரயோகங்களையும் பயன்படுத்தி அச்சுறுத்தி விட்டு பிரச்சினைகள் போட்டால் உமது ஊடக அடையாள அட்டையையும் இல்லாமல் செய்வேன் என மிரட்டி விட்டு சென்றுவிட்டார்.
இதனைத் தொடர்ந்து வேறு ஒரு பொலிஸ் அதிகாரி முறைப்பாட்டினை பதிவு செய்தார் அவரிடம் மதுபோதையில் அதிகாரிகள் உள்ளனர் அதனை பரிசோதனை செய்யுமாறு கோரிய போதும் அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இவ்வாறு அரச வாகனங்களை தவறாக பயன்படுத்தி மதுபோதையில் நின்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்காது ஊடகவியலாளர் மீது பொலிசார் மிரட்டல் விடுத்தமையானது இவர்கள் அனைவரும் இணைந்தே சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளுக்கு துணை போகின்றனர். இதனாலேயே இவ்வாறு நடந்து கொள்கின்றனர் என ஊடகவியலாளர் குற்றம் சுமத்தியதோடு குறித்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மாவட்ட செயலாளர் மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸ். ஆணைக்குழு உள்ளிட்ட தரப்புக்களிடம் முறைப்பாட்டினை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த முறைப்பாடு தொடர்பில் இன்று (08) நண்பகல் 12 மணிக்கு விசாரணைக்காக இரண்டு தரப்பினர்களும் பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டுள்ளனர்.
May be an image of ticket stub and text that says "OO- 0000 .ငမ.၁/၁ පැම්ණෙලී උදුපත முறைப்பாடு ஏற்றுங்கொள்ளல் Acknowledgement Compisint පොලීස් ස්ථාතය பொலிலஸ் நிட்லயம் Police PoliceStation Station 202b/04/01. L07 202b/04/0 மரங.......... දිකය இகதி Date පැමිණිලිකරුකේ முறைப்பாடு செய்யவரின் பெயர் Name of Complainant S. தவலிவன். පෑමිණිල්ලේ ස්වතාවය முறைப்பாட்டின் வகை Nature of Complaint dinE ៨ மந்தணம் சதாடப்ிலிலஸ...... තොරකුරු පොතේ යොමුව தகவல் புத்தக விபடம் Reference CIGII 385/ 153 සටතක් කරක නලධාරියාගේ අත්සත முறைப்பாடு பதிபவின் கையோப்பம் Signature Recording Officer A Hhng2c102235 ecio2s 35 සටහත් කරත කලධාරීයාගේ තම, තනකුර හා කිළ ලංකය முைப்பாடு பதிபவரின் பெயரும் பதவியும் பதிவிலக்கமும் Name Rank/& Reg. No. of Recording Officer A: ပါတရအခဲတာ Pc102835 Η 059640 5,000 (2024/03)P 9 ၉.ဿ රජයේ මුදණ දෙපාර්කමේන්තුව"May be an image of carMay be an image of textNo photo description available.No photo description available.May be an image of carMay be an image of car and road