மட்டு நாவற்குடாவில் இடம்பெற்ற விபத்தில் காத்தான்குடி இனைஞன் பலி மற்றொருவர் படுகாயம்!
மட்டக்களப்பு நாவற்குடா பிரதான வீதியில் நேற்றிரவு (1) 8.30 மணியளவில் நடந்த விபத்தில் சிக்கி காத்தான்குடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்ததோடு அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு இளைஞன் காயமடைந்துள்ளார்.
மட்டு கல்முனை சாலையில் காத்தான்குடியிலிருந்து மட்டக்களப்பு நோக்க்கி ஒரே திசையில் பயணித்த இரண்டு மோட்டார்சைக்கிள்கள் மோதிக்கொண்ட நிலையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறிய ஒரு மோட்டார்சைக்கிள் வீதித்தடுப்பில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது
விபத்தில் ஒரு இளைஞன் உயிரிழந்துள்ளார் உயிரிழந்த இளைஞன் காத்தான்குடியை சேர்ந்த 22 வயதானவர் என்பதுடன் வெளிநாட்டில் தொழில் புரிந்து விட்டு விடுமுறையில் நாடு திரும்பி விடுமுறையை முடித்துக்கொண்டு மீண்டும் வெளிநாடு பயணமாக இருந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த இளைஞனின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்.
காயமடைந்த இளைஞன் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்

