மலேசியாவின் பினாங்கு பகுதியில் மயானம் ஒன்றில் பகிரங்கமாகப் பாலியல் உறவில் ஈடுபட்ட குற்றத்திற்காக 58 வயதுடைய தமிழ் ஆடவர் ஒருவருக்கும், 37 வயதுடைய பெண் ஒருவருக்கும் மலேசிய நீதிமன்றம் ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளதாக மலேசிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மலேசியாவின் பினாங்கு பகுதியில் உள்ள சீன மயானம் ஒன்றில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பட்டப்பகலில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
ஓராண்டு சிறைத்தண்டனை
சம்பவத்தில் 58 வயதுடைய ஜெகதீசன் மற்றும் 37 வயதுடைய ஹலிலா அபு பக்கர் ஆகிய இருவரும் மயானப் பகுதியில் தகாத முறையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை அந்த வழியாகச் சென்ற நபர் ஒருவர் தனது அலைபேசியில் காணொளியாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய நிலையில் குறித்த காணொளி மலேசியாவில் வைரலாகப் பரவியதுடன், பொதுமக்களிடையே பெரும் கண்டனத்தையும் ஏற்படுத்தியது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பாகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பொது இடத்தில் அநாகரீகமாக நடந்துகொண்டமை மற்றும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தமை போன்ற குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டன.
வழக்கை விசாரித்த நீதிபதி, இருவருக்கும் தலா ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார். பொது இடங்களில் இவ்வாறான ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இதுவொரு பாடமாக அமைய வேண்டும் என்றும் நீதிமன்றம் சுட்டிகாட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.




