யாழில் சொர்னா அக்காவும் புருசனும் தொடர்ச்சியாகச் செய்யும் லீலை!!
யாழ் வடமராட்சி கிழ்ககு செம்பியன்பற்று தெற்கு மருதங்கேணியைச் சேர்ந்த இளங்கோ மற்றும் அவரது மனைவி ரேவதி ஆகிய இருவரும் மீள்குடியமர்த்தப்பட்டதிலிருந்து 2009ஆம் ஆண்டு முதல் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் மீது பலமுறை பளை காவல் நிலையத்தில் கசிப்பு தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல் மருதங்கேணி காவல் நிலையப் பிரிவிலும் இவர்களுக்கு எதிராக கசிப்பு வழக்குகள் உள்ளன.
சமீபத்தில் கூட மருதங்கேணி காவல்துறையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் வெளியே வந்துள்ளனர். அதன் பின் தங்கள் வீட்டில் விற்பனையை நிறுத்தி செம்பயன்பற்று தெற்கு பகுதியில் உள்ள பாடசாலை அருகே செல்லும் பிள்ளையார் கோவில் வீதியில் பெருமளவு கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக பிரதேச மக்கள் காவல்துறையிடம் அறிவித்த போதும், மருதங்கேணி காவல் நிலைய அதிகாரிகள் இவர்களிடமிருந்து லஞ்சம் பெற்று இவர்களின் சட்டவிரோத தொழிலுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர் என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே உயரதிகாரிகள் உடனடியாக தலையிட்டு மேற்கண்ட நபர்களை கைது செய்து அவர்களின் சட்டவிரோத செயல்பாடுகள் மற்றும் சொத்துக்குவிப்பு தொடர்பாக முழுமையான விசாரணைகளை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்வதாக அந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

