புதினங்களின் சங்கமம்

யாழில் வட்சப்பில் தன்னைப் பற்றி தவறான தகவல்கள் பரவிய விரக்தி! 17 வயது மாணவி துாக்கில் தொங்கி பலி!

யாழ்ப்பாணம், மாதகல் பகுதியில் 17 வயதான சிறுமியொருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.

நேற்று முன்தினம் அவர் தூக்கிட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட போதும், அவர் இன்று (21) உயிரிழந்தார்.

சிறுமியின் குடும்பத்தினருடன் பகைமை கொண்ட சிலர், சிறுமி தொடர்பில் அவதூறு பரப்பி வெளியிட்ட குரல் பதிவு, வட்ஸ்அப் குழுக்களில் பகிரப்பட்டதையடுத்து சிறுமி தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்ததாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.