புதினங்களின் சங்கமம்

மாணவர்களுக்கு ஆயுள்வேத மருந்து என கூறி காமத்தை அதிகரிக்கும் மதன மோதகம் கொடுத்து சீரழித்த கும்பல் பிடிபட்டது எப்படி?

பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களைக் குறிவைத்து சட்டவிரோத கஞ்சா கலந்த மதனமோதக மாத்திரைகளை விற்பனை செய்து வந்த சந்தேகநபர் ஒருவர் ஹட்டன் பிரதேச ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (19) இடம்பெற்ற இந்த நடவடிக்கையின் போது, மஸ்கெலியா நகரில் ஆயுர்வேத மூலிகை மருந்துக் கடை நடத்தி வந்த குறித்த நபர், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ரூ.250க்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்படும் போது, கடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 648 கஞ்சா கலந்த போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இம்மாத்திரைகளின் மொத்த மதிப்பு ரூ.1,62,000 ஆகும் என பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக மஸ்கெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்துமுன்னெடுக்கப்பட்டு வருகின்றன.