யாழ் வேலணையில் மாணவக் காவாலியும் அவனது காவாலி அப்பனும் செய்த கேவலம்! நடந்தது என்ன?
இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்
வேலணையில் மாணவன் ஒருவன் கணித வகுப்புக்குரிய வாட்ஸ் அப் குழுவில் இருந்து இரண்டு மாணவிகளின் தொலைபேசி இலக்கத்திற்கு சென்று அவர்களின் ப்ரொபைல் படங்களை எடுத்து , இன்னுமொரு மாணவியின் இலக்கம் என அவரின் தாயின் இலக்கத்தை எடுத்து (அந்த மாணவி தாயின் இலக்கமே பாவிப்பதால்) இரு மாணவிகளும் தவறானவர்கள் என மற்றைய மாணவியின் தாயின் தொலைபேசி இலக்கத்ததை பதிஞ்சு ரிக் ரொக்ல பதிவிட்டு இருக்கிறான்
அத பார்த்த சிலதுகள் அந்த தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு “என்ன மாதிரி” என விசாரித்து இருக்கிறார்கள்.
அவனுங்க கிட்ட என்ன எதுன்னு விசாரிச்சால் ரிக் ரொக்ல வந்ததால் எடுத்தோம் என கூறியுள்ளார்கள்.
பிறகு அந்த ரிக் ரொக் லிங்க தேடி , அது அந்த மாணவனுடையது என கண்டறிந்து வீட்ட போனால் , தகப்பன்காரன் வீட்ட போனவர்களுக்கு வாளால் துரத்தி துரத்தி வெட்டி இருக்கிறார்.
வெட்டினதும் இல்லாமல் ஊர்காவத்துறை பொலிஸ் நிலையம் சென்று , தங்கட வீட்டை மூன்று மோட்டார் சைக்கிளில் 06 பேர் தம்மை தாக்க வந்தார்கள் என முறைப்பாடும் செய்துள்ளார்.
முறைப்பாட்டை அடுத்து , “உடனடி” நடவடிக்கைக்கு இறங்கிய ஊர்காவற்துறை பொலிஸார் வீட்ட போன ஒருத்தரை பிடித்து , வாக்கு மூலம் எடுத்த போது , “இதான் நடந்தது” என சொன்ன போதும் , அதனை தவிர்த்து வீடு புகுந்து தாக்க முற்பட்டார்கள் என குற்றம் சாட்டி நீதிமன்றில் முற்படுத்தி இருக்கின்றனர்.
அதனை அடுத்து அந்த இளைஞனை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டது.
மறுநாள் சட்டத்தரணி நகர்த்தல் பத்திரம் ஊடாக ரிக் ரொக் பிரச்சனையையையும் , வாளால் வெட்டிய சம்பவத்தையும் மன்றின் கவனத்திற்கு கொண்டு வந்து , பிணை விண்ணப்பம் செய்ததை அடுத்து , அந்த இளைஞனுக்கு பிணை வழங்கப்பட்டதுடன் , ஏன் அது தொடர்பில் முறைப்பாடு செய்யவில்லை என மன்று கோரியபோது ,
தாம் அது தொடர்பில் முறைப்பாடு செய்ய சென்ற போது , அந்த முறைப்பாட்டை பொலிஸார் ஏற்கவில்லை. மாணவனின் தந்தை செய்த முறைப்பாட்டை ஏற்று , உடனே நடவடிக்கையில் இறங்கி ஒருவரை கைது செய்தனர் என கூறியுள்ளனர்.
அது தொடர்பில் சாத்தியக்கடதாசி முடிந்து மன்றில் சமர்ப்பிக்க மன்று அறிவுறுத்தியது.
ஆனால் , பாதிக்கப்பட்ட தரப்பினர் , பொலிஸாருக்கு எதிராக சாத்தியக்கடதாசி கொடுப்பதால் , பொலிஸாரால் தமக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்படும் என அதனை தவிர்த்தனர்.
சரி அதான் முடிஞ்சு இனியாவது முறைப்பாட்டை எடுங்க என ஊர்காவத்துறை பொலிசாரிடம் கோரிய போது, இது “சைபர் க்ரைம்” குற்றம் நீங்கள் யாழ்ப்பாணம் சென்று சைபர் க்ரைம் பிரிவில் முறைப்பாடு செய்யுங்க என அனுப்பி வைத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் சைபர் க்ரைமில் முறைப்பாடு செய்ய வந்தால், ரிக் ரொக் க்கு முறைப்பபாடு எடுக்க முடியாது என திருப்பி அனுப்பியுள்ளனர்.
மீண்டும் அவர்கள் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையம் சென்று சைபர் க்ரைம் பிரிவு முறைப்பாட்டை ஏற்கவில்லை என கூறிய போது , ஊர்காவற்துறை பொலிஸார் “பெரிய மனசு” பண்ணி முறைப்பாட்டை ஏற்றுக்கொண்டனர்.
முறைப்பாட்டை ஏற்று சுமார் 20 நாட்கள் “தீவிர புலன் விசாரணைகளை” மேற்கொண்டு , அதன் பின்னரே மாணவனையும் நியாயம் கேட்க சென்றவர்களை துரத்தி துரத்தி வாளால் வெட்டிய தந்தையும் நேற்று முன்தினம் திங்கட்கிழமை கைது செய்துள்ளனர்.
இது தொடர்பிலான செய்தி முதலாம் கருத்து பெட்டியில்.

