புதினங்களின் சங்கமம்

புதன் கிழமை லீவு கொடுப்பதால் நன்மை உள்ளதா? கோத்தாவுக்கு ஆலோசனை கூறிய அதே மட்டிக் கூட்டம் தான் அனுராவுடனும் இருக்கின்றதா?

இது ஒரு சமூகவலைத்தள பதிவாகும்
வாரத்தின் நடுவில் விடுமுறை கொடுத்தால் எரிபொருள் செலவை எப்படி குறைக்கலாம்?
இரசாயன உரம் இல்லாமல் வயல் செய்யலாம் என்று கோத்தாவுக்கு ஆலோசனை கொடுத்த அதே மட்டிக்கூட்டம்தான் அனுரவுக்கும் ஆலோசனை கொடுக்குது போல… 🚶
வாரத்தின் இறுதி விடுமுறை நாளோடு ஒரு நாளை கூட்டி விடுமுறை வழங்கினால்கூட பிரயோசனமானது தூர இடத்தின் அரச ஊழியர்களின் பயணம் குறையும் போக்குவரத்து நெருக்கடி இருக்காது தொடர்ச்சியாக கிடைக்கும் 3 நாள் விடுமுறை ஏதாவது பிரயோசனமாய் இருக்கும். இப்போ இடையில் விடுமுறை கொடுத்தால் பயணச்சுமை இரட்டிப்பாகும் அந்த விடுமுறை எந்த பயனையும் கொடுக்காது இயல்பான நிலைமை முறிவடைந்து குழப்பத்தில் அனைத்தும் முடியும்.
இதுவே வெள்ளிக்கிழமை விடுமுறையெனில் அடுத்துவரும் சனி ஞாயிறு என மூன்றுநாளும் தொடர் விடுமுறை பள்ளிமாணவர்கள் தொடக்கம் அலுவலக பணியாளர்கள் வரை இந்த நாட்களை பிரயோசனமாக கழிப்பார்கள் எந்த இயல்பு நிலை குழப்பமும் ஏற்படாது.
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு வீட்டில் நிற்பதோடு ஒரு நாள் அதிகமாக நின்றுவா… ஏலவே சனி ஞாயிறு விடுமுறையில் பூட்டப்பட்டிருக்கும் பாடசாலைகளையும் அரச நிறுவனங்களையும் அப்படியே மேலும் ஒரு நாள் பூட்டு… என்றல்லவா சொல்லவேண்டும்.
வாரத்தில் 4 நாள் தொடர்ச்சியாக வேலை 3 நாள் விடுமுறை அந்த மூன்றுநாளும் மின்சார நுகர்வு குறைவாக இருக்கும் அனல் மின்சார நிலையங்களை நிறுத்தி வைக்கலாம் புகையிரதங்களை மட்டுப்படுத்தலாம் பேருந்துக்களை மட்டுப்படுத்தலாம் பாரிய எரிபொருள் சேமிப்பை மேற்கொள்ளலாம் இதுதான் தூரநோக்கோடு அறிவார்த்தமாக செய்யப்படும் செயல்…
இது வாரத்தின் நடுவில் ஒருநாள் விடுமுறை கொடுத்தால் அந்த ஒருநாளுக்காக மின்சார கட்டமைப்பில் மாற்றம் செய்யமுடியாது பேருந்து கட்டமைப்பில் மாற்றம் செய்ய முடியாது புகையிரத ஓட்டத்தில் மாற்றம் செய்யமுடியாது பிறகெப்படி எரிபொருள் சிக்கனம் நடக்கும்?
கேட்டா அறிவுள்ள அரசாங்கம் என்றுறானுகள் செயல்களில் அடிப்படை அறிவே இல்லை…