புதினங்களின் சங்கமம்

யாழில் பல பெண்களை வேட்டையாடும் பொலிஸ் காவாலி!! பல குடும்பப் பெண்கள் நடுத் தெருவில்!

சுன்னாகம் கந்தரோடை பகுதியை வதிவிடமாகக் கொண்ட, காங்கேசன்துறை காவல் நிலையத்தில் பணியாற்றும் ரெஜினோல்ட் எனும் காவல்துறை உத்தியோகத்தர் மீது பல்வேறு மோசடி மற்றும் ஒழுக்கக்கேன புகார்கள் கிடைத்துள்ளன.

இவர் ஒட்டுசுட்டான் பகுதியில் பணியாற்றிய போது, ஒரு பெண்ணை அவரது கணவர் மற்றும் குழந்தைகளிடமிருந்து பிரித்து, தனியாக கூட்டிச் சென்று சிறிது காலம் வாழ்ந்துவிட்டு பின் அவரை கைவிட்டுள்ளார்.

ஒட்டுசுட்டான் காட்டுப் பகுதியில் வேறொரு பெண்ணுடன் தகாத முறையில் இருந்தபோது, மாடு மேய்க்கச் சென்றவர்களால் பிடிக்கப்பட்டு, முச்சக்கர வண்டியில் ஏற்றப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

முல்லைத்தீவு பணிமுறை: இதற்கு முன்னதாக முல்லைத்தீவில் பணியாற்றிய காலத்திலும் இவர் மீது இது போன்ற பல புகார்கள் எழுந்துள்ளன.

தற்போது காங்கேசன்துறை காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் இவர், அங்கு வரும் இளம் பெண்களின் தொலைபேசி எண்களைப் பெற்று அவர்களுடன் தகாத உறவில் ஈடுபட்டு வருவதாகவும், ஒரு பெண்ணை வீட்டை விட்டு பிரித்து தனியாக அழைத்துச் சென்று வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.