நயினாதீவு தெற்கு பிள்ளையார் கோவில் பூசகர், அதே பகுதியில் அமைந்துள்ள அம்பாள் ஆலய பூசகரை நெஞ்சில் உதைந்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்துள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
அதே பகுதியைச் சேர்ந்த முருகன் கிருஷ்ணகுமார் (வயது) என்ற பூசகரே இன்று மாலை 5 மணியளவில் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
குறித்த பூசகரின் மனைவியுடன் உயிரிழந்த பூசகர் தகாத உறவில் ஈடுபட்டதாகவும், அதனால் ஆத்திரமடைந்த முருகேசு கலைச்செல்வம் என்ற இந்த பூசகர் வாமதேவ கைலாசபாணு குருக்களின் வீட்டிற்கு முன்பாக உள்ள வீட்டில் முருகன் கிருஷ்ணகுமார் உறங்கிக்கொண்டிருந்த போது, அவருடன் தகராற்றில் ஈடுபட்டதுடன், கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்ற ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், முருகேசு கலைச்செல்வம் என்ற பூசகரை கைது செய்துள்ளனர்.




