பாடசாலை சென்று துவிச்சக்கர வண்டியில் ஒன்றாக வீடு திரும்பிக்கொண்டிருந்த இரு மாணவர்கள் மீது மணல் ஏற்றிவந்த லொறி மோதியதில் இரு மாணவர்களும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.
இச் சம்பவம் புத்தளம் மாவட்டத்தில் உள்ள கடயமோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது
இவ் மாணவர்கள் இருவரும் 8 மற்றும் 12 வயதுடையவர்கள் என்பதுடன் 3 மற்றும் 7 ம் தரங்களில் கல்வி கற்பவகள் எனவும் தெரிவிக்கப்படுகிறது
லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது…..
பாடசாலை ஆரம்பமாகும் நேரத்திலும் முடிவுறும் நேரத்திலும் கனரக வாகனங்கள் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சிலர் சட்டத்தினை மீறி லொறிகளை செலுத்துகின்றனர்





