புதினங்களின் சங்கமம்

யாழில் பாலைதீவு கோவிலுக்கு சென்றவர்களின் படகு கவிழ்ந்து பலர் பலி! பெரும் சோகம்! வீடியோ

யாழ் குருநகர் பகுதியிலிருந்து பாலைதீவு நோக்கிச் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து பலர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறித்த படகில் இருந்த முதியவர்கள், சிறுவர்கள், பெண்கள் எனப் பலர் நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், அவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் அப்பிரதேச கடற்றொழிலாளர்கள் உடனடியாக ஈடுபட்டுள்ளனர்.

இதில் மூன்று பேர் கரைக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும், தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அங்கு பரபரப்பான சூழல் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.