யாழில் தனிமையில் வசித்து வந்த 29 வயது ஜதுசன் சடலமாக மீட்பு! கொலையா?
யாழ் வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் வசித்து வந்த கணேசலிங்கம் ஜதுர்சன் (வயது29) என்பவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (02/03) காலை குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து, அக்கம் அயலவர்கள் காவல்துறையினருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
அதனையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர், அழுகிய நிலையில் காணப்பட்ட உடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


