புதினங்களின் சங்கமம்

யாழில் இரவு பெற்றோல் செற்றில் இளைஞனுடன் கதைச்சு சிரித்துக் கொண்டிருந்த குடும்பப் பெண் மீது கணவன் தாக்குல்! தப்பி ஓடிய இளைஞன்!

யாழ் வலிகாமம் பகுதியில் உள்ள பெற்றோல செற்றில் லைனில் நின்று பெற்றோல் அடிக்க காத்திருந்த 35 வயது மதிக்கத்தக்க குடும்ப் பெண் மீது கணவர் மேற் கொண்ட தாக்குதலால் அப்பகுபகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மோட்டார் சைக்கிளில் வந்த கணவர் தனது மனைவியை லைனில் தேடித் திரிந்து கண்டு பிடித்து ஹெல்மட்டால் தாக்கியதாகத் தெரியவருகின்றது. ஏற்கனவே மனைவிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வீட்டுக்கு வருமாறு கணவன் அழைத்த போதும் மனைவி செல்லாமல் நின்றுள்ளார். இதனால் கடுப்பான கணவன் பெற்றோல் செற்றில் லைனில் நின்றிருந்த மனைவி மீதே தாக்குதல் நடாத்தியுள்ளார். மனைவியை தேடிக் கொண்டு வந்த கணவன் மனைவி பின்னால் நின்றிருந்த இளைஞன் ஒருவருடன் சிரித்துக் கதைத்துக் கொண்டிருந்ததாகவும் அதனையும் சுட்டிக் காட்டி இவங்களோட …………. வந்தனீ என பச்சை துாசணத்தில் ஏசியவாறு மள மளவென ஹெல்மட்டால் தாக்கியுள்ளார். மனைவி மீது கணவன் நடாத்திய கொலை வெறித் தாக்குதலை பார்த்து அதிர்ந்த இளைஞன் தன் மீதும் தாக்குதல் நடாத்தலாம் என்ற அச்சத்தில் மோட்டாா் சைக்கிளை விட்டுவிட்டு ஓடித் தப்பியதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

கணவனின் தாக்குதலுக்குள்ளான மனைவி மோட்டார் சைக்கிளையும் எடுக்காத நிலையில் கணவன் இழுத்துச் சென்றதாகத் தெரியவருகின்றது. நீண்ட நேரமாக மனைவியின் மோட்டார் சைக்கிள் அப்பகுதியில் நின்றதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.