புதினங்களின் சங்கமம்

அல்லைப்பிட்டியில் காவாலிலைய சுட்டுக் கொன்றதற்கு எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்யும் காவாலிகளுக்காக!! புத்தளத்தில் நடந்தது யாழிலும் நடக்கலாம்!!

புத்தளத்தில் 16 வயதான போதைப்பொருள் பாவிக்கும் காவாலி ஆட்டோ ஒன்றைக் கடத்தி விற்பதற்காக 77 வயதான ஆட்டோ ஓட்டும் ஒரு முதியவரை குத்திக் கொன்று ஆட்டோவைக் கடத்தியிருந்தான். இந்தக் காவாலி ஆட்டோ ஓட்டிய முதியவரை குத்திக் கொல்லும் போது எதிரே ஒரு பொலிஸ்காரன் வந்திருந்தால் அவனையும் நிச்சயம் கொல்ல முற்பட்டிருப்பான்… அதனால் அவன் மீது பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம் நடாத்தி அவனை சுட்டுக் கொன்றிருக்கலாம்… அதன் பின்னர் இந்தப் போதைப்பொருள் காவாலிக்கு ஆதரவாக பொலிசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போதைப்பொருள் காவாலியை உருவாக்கிய கேடுகெட்ட பெற்றோர் முயற்சி செய்திருக்கலாம்…

முதியவரைக் கொன்ற 16 வயதுக் காவாலி

No photo description available.

கொல்லப்பட்ட முதியவர்

May be an image of one or more people and people smiling

இதே போலவே அல்லைப்பிட்டியிலும் போதைப்பொருள் பாவித்து நள்ளிரவில் மாடு கடத்தவோ அல்லது கஞ்சா கடத்தவோ சென்ற 16 வயதுக் காவாலி வாகனத்தில் சென்ற வேளை அதை நிறுத்தாது பொலிசாருக்கு மோத முற்பட்ட போது சுட்டுக் கொலை செய்யப்பட்டான்.

குறித்த காவாலியின் குடும்பமே கொள்ளை மற்றும் போதைப்பொருள் விநியோகங்களுடன் தொடர்புள்ள குடும்பமாகும். ஊரே அவர்களை ஒதுக்கி வைத்திருந்தது. அந்தக் காவாலியின் மரண வீட்டுக்கு அப்பகுதியைச் சேர்ந்த எவரும் செல்லவில்லை. குறித்த காவாலியின் தாயார் இரண்டிற்கும் மேற்பட்ட கலியாணங்களைச் செய்திருந்ததுடன் தற்போது 3 வது கணவனை பிரிந்து 2வது கணவடன் வாழ்ந்து வருகின்றாள்.

16 வயதுக்கு முன்னரே குறித்த காவாலியை கொள்ளை, கடத்தல் வேலைகளுக்கு அனுப்பி அவன் கொண்டுவரும் பணத்தில் சுகபோக வாழ்க்கை நடாத்தி வந்துள்ளாள். ஒரு சிறுவனைதொழில் செய்ய விட்டதற்காக அவளையும் அவளது கணவனையும் கைது செய்ய வேண்டும்.

குறித்த காவாலிக் குடும்பத்திற்கு ஆதரவாக பேய்த்தனமாக யாழ் பஸ்நிலையத்தில் ஆர்ப்பாட்டம் செய்தவர்களின் பின்னணியில் போதைக் கும்பலின் பணம் புகுந்து விளையாடி இருக்கலாம். இது தொடர்பாக பொலிசார் விசாரணைகளை நடாத்துதல் வேண்டும்…

2004ம் ஆண்டு வன்னியில் மாங்குளம் பகுதியிலிருந்து துணுக்காய் கிளிநொச்சிப் பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஹயஸ்வாகனம் ஒன்றை புலிகளின் காவல்துறையினர் மறித்துள்ளனர். அந்த வாகனம் அவர்களின் கட்டளையை மீறிச் சென்ற போது நடாத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் வாகனத்தில் இருந்த 5 பேர் கொல்லப்பட்டார்கள். 2 பேர் படுகாயமடைந்திருந்தனர். அவர்களின் வாகனத்தை பரிசோதித்த போது அதற்குள் கசிப்பு கலன்கள் காணப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஒருவர் கூட அந் நேரத்தில் மூச்சு விடவில்லை.
அல்லைப்பிட்டியில் சுட்டுக் கொல்லப்பட்ட காவாலி குடும்பத்திற்கு ஆதரவாக பஸ் நிலையத்தில் மட்டைகளைத் துாக்கிக் கொண்டு நின்ற இந்தக் கூட்டம் புலிகளின் காலத்தில்அந்த நேரம் இவ்வாறு செய்திருந்தால் பச்சை மட்டையால் அபிசேகம் செய்யப்பட்டு பங்கருக்குள் போடப்பட்டிருப்பார்கள்..

சிங்கப்பூரில் 3 கிராம் போதைப்பொருள் வைத்திருந்தாலேயே கேட்டுக்கேள்வி இல்லாமல் துாக்கில் போட்டுவிடுவார்கள்…. இலங்கையில் மரணதண்டனை இருந்தாலும் நிறைவேற்றப்படுவதில்லை. அதனால் போதைக்கூட்டம் அடங்கவில்லை….

இவற்றை எழுதியதற்காக ”உன்ர குடும்பத்தில் இப்படி நடந்தால் இப்புடி எழுதுவியோடா? பொலிசுக்கு வால் பிடிக்கிறியோடா? என்று கொமன்ஸ் பண்ண ஓடிவரும் பன்னாடைகளுக்கு  வடிவேலு பாணியில் ஒன்றைச் சொல்ல விரும்புகின்றோம்….

”நாங்கள் ஏன்டா நள்ளிரவில லைசன்ஸ் இல்லாமல் அல்லைப்பிட்டிக்கு 16 வயது பெடியனை அனுப்ப போகிறோம்?”