கொடூர போதைப்பொருளுடன் கைதான ஸ்ரீ ரெலோ கட்சியின் தலைவன் உதயராசா என்ற பச்சைக் கள்ளன் தொடர்பாக மேலும் பல திடுக்கிடும் தகவல்கள்!!
ஸ்ரீ ரெலோ கட்சியின் தலைவர் ப.உதயராசா கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
அதன்படி, 7 நாட்கள் தடுப்புக் காவலில் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில், நீர்கொழும்பு, கொச்சிக்கடைப் பகுதியில் வைத்து உதயராசா கைது செய்யப்பட்டுள்ளார்.
பேலியகொடைப் பகுதியில் கடந்த மாதம் 29 ஆம் திகதி 4 கிலோ 423 மில்லிகிராம் கொக்கேய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
இந்தப் போதைப்பொருள் கடத்தல் சம்பவத்துடன் ஸ்ரீ ரெலோ கட்சியின் தலைவர் உதயராசா தொடர்புபட்டுள்ளார் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாணத்தின் வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், கொழும்பில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பல முக்கிய குற்றச் செயல்களுடன் உதயராசா தொடர்புபட்டுள்ளார் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கீழே உள்ள தகவல் சமூகவலைத்தளப் பதிவாகும்
வவுனியாவின் முன்னாள் குற்றத்தடுப்பு பிரிவு பொலீஸ் பொறுப்பு அதிகாரியான அழகியவண்ண அவர்களுக்கு பல இளம்பெண்களைக் கூட்டி கொடுத்த போதைக் கடத்தல் மன்னன் உதயராசா???
உதயராசா வடக்கில் போதைப் பொருள் சாம்ராஜ்ஜியத்தில் கொடிகட்டி பறக்க பெருமளவு உதவி செய்தவன் இந்த அழகிய வண்ண என்ற பொலிஸ் அதிகாரி என்று விசாரணைகளில் தகவல் வந்துள்ளது
வன்னியில் வேசம் போட்ட பலரின் திரை கிளியபோகிறது.


