புதினங்களின் சங்கமம்

யாழில் 63 வயதான மாமியுடன் கள்ளத் தொடர்பு ! 43 வயது ஆசிரியர் மீது மனைவி தாக்குதல்! வடிவேலு பாணியில் பொலிசாரிடம் கத்திய ஆசிரியர்! நடந்தது என்ன?

யாழில் 43 வயதான பிரபல யாழ் நகரப் பாடசாலை ஆசிரியர் ஒருவர் மனைவியின் தாக்குதலில் தலை மற்றும் முகப் பகுதிகளில் காயமுற்ற நிலையில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் தற்போதும் சிகிச்சை பெற்று வருகின்றார். அவரது கண்களில் ஒன்று கடுமையாகப் பாதிப்புக்குள்ளான நிலையில் இருப்பதாகத் தெரியவருகின்றது. வீக்கம் வற்றிய பின்னரே கண் தொடர்பான சிகிச்சை அளிக்க முடியும் என தனியார் வைத்தியசாலை வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

மனைவியின் தாயாருடன் கள்ளத் தொடர்பில் இருந்ததால் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இரவில் நல்ல நித்திரையில் இருந்த கணவன் மீது ரீப்பைக் கட்டையால்  கத்தக் கத்த மனைவி தாக்குதல் நடாத்தியதாக் தெரியவருகின்றது. அயலவர்கள் மூலம் மீட்கப்பட்ட ஆசிரியர் தற்போது தனியார் வைத்தியசாலையில் தங்கியிருந்த சிகிச்சை பெறுகின்றார்.  நேற்று நள்ளிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதித்த போது கீழே வீழ்ந்து காயப்பட்டதாக அயலவர்கள் கூறிய போதும் வைத்தியசாலை வட்டாரங்கள் அவரை அனுமதிக்க மறுத்த போது மனநலக்குறைவான மனைவி தாக்கிவிட்டார் என கூறிய பின்னரே அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரியவருகின்றது.

ஆசிரியரின் மனைவி வங்கி ஒன்றின் உத்தியோகத்தர் எனவும் தாக்குதலில் காயப்பட்டு வைத்தியசாலையில் கணவன் அனுமதிக்கப்பட்ட பின் மனைவி நேற்று நண்பகல் அங்கு வந்து மீண்டும் கணவனை தாக்க முற்பட்டதாகவும் தெரியவருகின்றது.

குறித்த ஆசிரியர் மனைவியின் 63 வயதான தாயை நீண்ட காலமாகக் கட்டாயப்படுத்தி உறவு கொண்டு வந்துள்ளார்.

 வெளிநாட்டில் ஏனைய பிள்ளைகள் வசித்து வந்த சூழ்நிலையில் கொரேனா காலத்தில் கணவனை இழந்த பின்  அக் காலத்திலிருந்து தாயார் தனது மகளுடன் வசித்து வந்துள்ளார்.  மருமகனின் நடவடிக்கை தொடர்பாக தாயார் கடும் வேதனையில் இருந்த போதும் மகளிடம் கூறாமல் இருந்து வந்ததாகவும் ஆசிரியர் தாக்குதலுக்கு உள்ளாவதற்கு ஓரிரு நாட்களின் முன் தாயாருடன் உறவு வைத்திருந்தது தொடர்பாக மனைவி அறிந்த பின்னரே இத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அயலவர்கள் மூலம் தெரியவருகின்றது.

இதே வேளை ஆசிரியரை காயத்துடன் ஏற்றிச் சென்றுவிட்டு திரும்பிய ஓட்டோவைப் பொலிசார் சோதனை செய்த போத அந்த ஓட்டோவில் இருந்த இருவரிலும் ஓட்டோவிலும் இரத்தம் காணப்பட்டதால் பொலிசார் சந்தேகப்பட்டு வைத்தியசாலையிலும் விசாரணை செய்துவிட்டு ஆசிரியர் தொடர்பாகவும் விசாரணை செய்த பின்னரே விடுவிக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

ஆசிரியரின் மீதான மனைவியின் தாக்குதல் தீவிரத்தை காயத்தின் மூலம் கண்டு கொண்ட பொலிசார் முறைப்பாடு தருமாறு கோரிய போது கணவர் அதற்கு மறுப்பு தெரிவித்ததுடன் குடும்பச் சண்டைக்குள் எதற்கு நுழைகின்றார் என வடிவேலு பாணியில் வைத்தியசாலையில் பொலிசார் மீது பாய்ந்ததாக தெரியவருகின்றது. இதனையடுத்து பொலிசார் அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளார்கள்.