ஏ9 வீதியில் பளைப் பகுதியில் டிப்பர் மோதி குடும்பப் பெண் செல்வவதி மரணம்!
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பளை நகர் பகுதியில் சற்றுமுன் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்தில் சோரன்பற்று பகுதியைச் சேர்ந்த குமாரசாமி செல்வவதி என்கின்ற 63 வயதுடைய பெண் சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து பளை நோக்கிச் சென்று கொண்டிருந்த உந்துருளியும், பளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனமும், விபத்திற்குள்ளாகியுள்ளது.
டிப்பர் வாகனத்தின் ஓட்டுநர் பளை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பாக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

