காத்தான்குடியின் பிரபல சட்டத்தரணி நௌசாட் எப்போது கைது செய்யப்படுவார்??
காத்தான்குடியின் பிரபல சட்டத்தரணி நௌசாட் எப்போது கைது செய்யப்படுவார்??
காத்தான்குடியில் அஃபறா என்ற பெண் சட்டத்தரணி ஒருவரை திருமணம் செய்தமையின் மூலமாக காத்தான்குடியை வாழ்விடமாக கொண்டு மட்டக்களப்பு நீதிமன்றங்களில் வழக்காடி வந்த நௌசாட் எனப்படும் சட்டத்தரணி ஒருவரை கைதுசெய்வதற்கான பூர்வாங்க வேலைப்பாடுகள் நடந்து வருகின்றன.
அவரது அலுவலகத்தில் பணியாற்றிய காத்தான்குடியை சேர்ந்த பெண் ஒருவரை உணவில் போதை மருந்துகளை கலந்து கொடுத்து மயக்கமடைய செய்தபின்,பலமுறை பாலியல் உறவை வைத்திருந்த்தாகவும் அதனால் அந்த பெண் கர்ப்பமடைந்துள்ளதாகவும்,பாதிக்கப்பட்ட பெண் வாக்குமூலமளித்த நிலையிலேயே இந்த கைதுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
சம்பவம் குறித்து மேலும் அறிகையில்,குறித்த நௌசாட் என்கிற சட்டத்தரணி தனது அலுவலகத்தில் உதவியாளராக காத்தான்குடியை சேர்ந்த ஏழைப்பெண் ஒருவரை பணிக்கு அமர்த்தியுள்ளார்.
குறித்த சட்டத்தரணியிடம் பல பெண்கள் உதவியாளர்களாக பணியாற்றி விலகி சென்ற நிலையில் நான்காவதாக குறித்த பெண் பணிக்கு சேர்ந்துள்ளார்.
தனது அலுவலகத்தின் மேல் மாடியில் வாடகைக்கு விடக்கூடிய நிலையில் அறைகளை கொண்ட கட்டிடம் ஒன்றைத்தான் குறித்த நௌசாட் அலுவலகமாக நடாத்தி வந்துள்ளார்.
இந்தநிலையில் சந்தர்ப்பங்களை பார்த்து குறித்த பெண்ணுடன் பாலியல் தொடர்புகளை பேணி வந்துள்ளார்.
அதிலும் குறித்த பெண்ணுக்கு உணவு வாங்கி கொடுக்கும் போது அதில் போதை மருந்துகளை கலந்து அவளை மயக்கமடைய அல்லது சுய நினைவிலிருந்து அகற்றிய பின் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில்,குறித்த பெண்ணை காத்தான்குடியின் பெயர் குறிப்பிடகூடிய வியாபாரி ஒருவரின் மகனுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் திருமணம் முடித்து கொடுத்துள்ளனர்.
திருமணமான நாளில் இருந்து குறித்த பெண் வாந்தியும் மயக்கமுமாக காணப்பட்டதால் அவளை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
அதன் போது குறித்த பெண் 13 வாரங்கள் கரப்பவதி என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து மாப்பிளை வீட்டார் பொலிசாரை அணுகியபோது,பொலிசாரினால் குறித்த்சம்பவம் தொடர்பான முறைப்பாடை பதிவு செய்வதில் இழுபறி காணப்பட்டுள்ளது.
பொலிசாருக்கும் சட்டத்தரணி நௌசாட்டுக்கும் உள்ள பண பழகொடுக்கல் வாங்கலே இத்தகைய பின்னடிப்புக்கு காரணமாக அமைந்துள்ளது.
அதனை தொடர்ந்து மாப்பிளை வீட்டார் பள்ளி வாசல்கள்,பிரதேச செயலகம்,பெண்ணியவாதிகள் என பலரை அணுகியதன் விளைவாக பாதிக்கப்பட்ட பெண்ணால் மேற்குறித்த வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளது.
என்னதான் இருந்தாலும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொலிசார் மனது வைத்தால் மட்டுமே பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அப்பாவி மணமகனுக்குமான தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும்.
பொலிசாரின் பல்வேறுபட்ட இழுத்தடிப்புகளில் #சட்டத்தரணி_பிறேம்நாத் அவர்களுடைய தலையீடுகளும் இருப்பதாக காத்தான்குடியின் அப்பாவி பொலிசார் பேசிக்கொள்கின்றனர்.
இந்த இழுபறி நிலைகளுக்குள் எப்படியாவது குறித்து சட்டத்தரணி பாலியல் சுரண்டல் அல்லது பாலியல் பலாத்காரம் என்ற அடிப்படையில் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டம் தன் கடமையை செய்யும்வரை காத்திருப்போம்
Rauff Hakeem
Dr. MLAM Hizbullah
Anura Kumara Dissanayake
Rohan Olugala
சட்டத்தரணி கேசவன் சயந்தன்
ந.ஸ்ரீகாந்தா சட்டத்தரணி செயலாளர் நாயகம் தமிழ் ஈழ விடுதலை இயக்கம்
Jeyananthan Lawyer

