நாங்க தமிழர்! நாங்க கனடா. ஆனால் மற்ற தமிழர்கள் கனடா வர வேண்டாம் என்று சொல்லுவம்.
நாங்க தமிழர்!
நாங்க கனடா. ஆனால் மற்ற தமிழர்கள் கனடா வர வேண்டாம் என்று சொல்லுவம்.
நாங்க தமிழர்!
கனடாவில் வேலை இல்லை என்று செல்லுவம். ஆனால் இரண்டு வேலையும் நல்ல சம்பளத்தோட நல்ல வேலை செய்வம்.
நாங்க தமிழர்!
கனடாவில் கஸ்ரம் என்று சொல்லுவம். ஆனால் இரண்டு வீடு வைத்திருப்பம். இரண்டு மில்லியன் dollars மேல் சொத்து வைத்திருப்பம்.
நாங்க தமிழர்!
குளிர் வராதேங்கோ எண்டுவம். நாடு போனா வெக்க தாங்க மாட்டம் என்று படம் காட்டுவம்.
நாங்க தமிழர்!
என்னோட பிள்ளை கனடாவில் என்று பெருமை பீத்துவம். ஆனால் பக்கத்து வீட்டு காறன் போறான் என்றால் வயிறு கூட ஒரு நிலைக்கு வர முடியாம தவிப்பம்.
நாங்க தமிழர்!
எங்கட பிள்ளை கனடாவில் நல்லாய் படித்து நல்ல வேலையில் இருக்கிறார் என்று சொல்லுவம். மற்றவன் பிள்ளை வந்தா இங்கே பாடசாலை கூட சேர முடியாது சொல்லுவம்.
நாங்க தமிழர்!
Visitor visa பொய் என்றுவம். ஆனால் நாங்க போய் சேர முடியாதா என்று ஓடி திரிவம் .
நாங்க தமிழர்!
கனடா போக வேண்டாம் என்று சொல்லுவம். ஆனால் நாங்க போக என்ன வழி இருக்கிறது என்று பார்ப்பம்.
நாங்க தமிழர்!
கனடா எப்படி visitor visa ஊடாக போனனியள் என்றால் நாங்க வந்த வழியே தெரியாத மாதிரி கதைப்பம்.
நாங்க தமிழர்!
நாங்கள் அகதியாய் வந்து ஐயா சாமி என்று கெஞ்சி மண்டாடி காட் எடுத்து படம் காட்டுவம். அதை கூட மற்ற தமிழன் செய்ய விட மாட்டம்.
நாங்க தமிழர்!
நாட்டுக்கு வந்து வெளிநாடு என்று படம் காட்டுவம். ஆனால் எவனாவது வெளிநாடு வருவதை விரும்பவே மாட்டம்.
நாங்க தமிழர்… எங்கள் கதை சொல்லி கொண்டே போகலாம் பாக்கிற உங்களுக்கு bour அடிக்கும் என்பதால் இதோடு நிறுத்துறன்.

