நல்லுார் பிரதேசசபை எல்லைக்குள் அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டடம்!! தவிசாளரும் செயலாளரும் லஞ்சம் பெற்றதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!!
நல்லுார் பிரதேசசபை எல்லைக்குள் நல்லுார் கிழக்கில் இராமலிங்கம் வீதியில் முன்னர் பூங்கனிச்சோலை என்று அழைக்கப்பட்ட தனியார் பூங்கா இருந்த காணியின் ஒரு பகுதியில் வீதியோரமாக சீமெந்து மற்றும் கம்பிகள் கொண்டு வாகனசுத்திகரிப்பு நிலையம் அல்லது வாகன திருத்தகம் போன்ற ஒரு அமைப்பு ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது. குறித்த கட்டட நிர்மாணம் தொடர்பாக நல்லுார் பிரதேசசபைக்கு பலர் தெரியப்படுத்திய போதும் குறித்த பிரதேசசபை தவிசாளர் மற்றும் செயலாளர் மௌனம் சாதித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றார்கள். குறித்த கட்டடம் எந்தவித பிரதேசசபையின் அனுமதியும் பெறப்படாமல் கட்டப்பட்டு வருவதாகவும் அந்தக் கட்டடம் மக்கள் குடியிருப்புக்கள் நெருங்கிய பகுதியில் எதற்காக அமைக்கப்பட்டு வருகின்றது என தெரியாமல் இருப்பதாகவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றார்கள். குறித்த கட்டம் அமைப்பதற்காக நல்லுார் பிரதேசசபை தவிசாளர் மற்றும் செயலாளர் பெருமளவு லஞ்சம் வாங்கியிருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுகின்றது. வடக்கு மாகாண ஆளுநர் இது தொடர்பாக அக்கறை செலுத்த வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.

