யாழில் மின்னல் வேகத்தில் மோட்டுச்சயிக்கிளில் ஓடி வானுடன் நடந்த மோதல்!! 6 பேர் படுகாயம்!!
யாழில் கண்ணிமைக்கும் நொடியில் நிகழ்ந்த பாரிய விபத்து 6 பேர் காயம்!நேற்றிவு யாழ் கஸ்தூரியார் வீதியில் இடம்பெற்ற விபத்தின் CCTV காட்சி!
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். யாழ். கஸ்தூரியார் வீதி மற்றும் பெரிய கடை வீதி இணையும் சந்தியில், வேன் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில் விபத்தின் போது வேனில் பயணித்த நான்கு பேரும், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவருமாக மொத்தம் ஆறு பேர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், குறித்த விபத்து தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொன்று வருகின்றனர்.

