தெஹிவளையில் பிரபல உணவகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் “சனா மாமா” படுகொலை!
தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெரைன் டிரைவ்வில் அமைந்துள்ள உணவகமொன்றுக்கு முன்பாக இன்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (2026.01.09) இரவு சுமார் 8:10 மணியளவில், தெஹிவளையில் உள்ள பிரபல “Sea Shark” உணவகத்திற்குள் கடற்கரைப் பகுதியில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அங்கு நின்றிருந்த அடையாளம் தெரியாத இருவர், பி**ஸ்ட**ல் வகை துப்பாக்கியால் இலக்கு வைத்துச் சுட்டுவிட்டு, ஸ்கூட்டர் வகை மோட்டார் சைக்கிளில் கொழும்பு திசையை நோக்கித் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
டி.ஏ. சனத் என்ற சனா மாமா என அழைக்கப்படும் 55 உணவக உரிமையாளரே இவ்வாறு கொல்**லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குழு மோதலே காரணமா?
முதற்கட்ட விசாரணைகளின்படி, இந்தச் சம்பவம் திட்டமிடப்பட்ட இரு குற்ற கும்பல்களுக்கு இடையே நிலவும் பகையின் வெளிப்பாடு எனத் தெரியவந்துள்ளது. உயிரிழந்த சனத் என்பவர், பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ‘சூவா சமந்த’ என்பவரின் நெருங்கிய சகா என்றும், இந்தத் தாக்தகுலானது மற்றுமொரு பாதாள உலகக் குழுத் தலைவரான ‘படோவிட்ட அசங்க’ என்பவரின் தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தப்பியோடிய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

