புதினங்களின் சங்கமம்

யாழ் வடமராட்சியில் கறுப்பு நிற ஆட்டோவுக்குள் நடக்கும் மர்மம்!!(Photos)

யாழ் வடமராட்சிப் பகுதி நெல்லியடி, கரவெட்டி, துன்னாலைப் பகுதிகளில் கறுப்பு நிற ஆட்டோ ஒன்று மர்மமான முறையில் திரிவதால் அப்பகுதி மக்கள் சந்தேகம் கொண்டுள்ளனர். NP ABI-9942 என்ற இலக்கமுடைய குறித்த ஆட்டோவை செலுத்தும் நபர் முஸ்லீம் போல் இருப்பதாகவும் மாலை வேளைகளில் ஆட்டோவின் பின் பகுதியை பொதுமக்கள் எவரும் பார்க்காமல் இருப்பதற்காக மறைப்புகள் மூலம் மறைத்தே வீதியில் செலுத்திச் செல்வதாகவும் ஆட்டோவின் உள்ளே யார் இருக்கின்றார்கள் என தெரியாதபடி அந்த ஆட்டோ மர்மமான முறையில் நடமாடித்திரிவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த ஆட்டோவில் விபச்சாரிகள் அல்லது கஞ்சா, போதைப்பொருட்கள் கொண்டு செல்லாம் என்ற சந்தேகமும் மக்களுக்கு எழுந்துள்ளது. இந்த ஆட்டோ துன்னாலைப்பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் புகுந்தவுடன் அந்த வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக அந்த வீட்டின் பாரிய கதவை மூடிவிடுகின்றனர். இதனால் அந்த வீட்டுக்குள் என்ன நடக்கின்றது எனத் தெரியவில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக பொலிசார் மற்றும் ஆட்டோச்சாரதிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Image may contain: 1 person, outdoorImage may contain: one or more people and outdoorImage may contain: 1 person, sitting and standing