புதினங்களின் சங்கமம்

நீதிமன்ற காவலில் இருந்த 1 கோடி 30 லட்சம் பெறுமதியான நகைகள் களவெடுத்த குற்றச்சாட்டு!! யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நீதிபதி ரஞ்சித்குமார் பதவி நீக்கம்!!

கடந்த நவம்பர் மாதம் வெள்ளிக்கிழமை (21)  மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு சான்றுப்பொருள் வைக்கும் அறையில் இருந்து 1 கோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான 350 கிராம் தங்க நகைகள் காணமல் போன சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற பதில் பதிவாளர் களுவாஞ்சிகுடி பொலிஸாரால்) கைது செய்யப்பட்டார்.

களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற  பதில் பதிவாளர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இதன் பின்னணியிலேயே மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் பணியாற்றிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நீதிபதி ஜே.பி.ஏ ரஞ்சித்குமார் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நகைத் திருட்டுச் சம்பவத்தைதொடர்ந்து  மேலதிக விசாரணைகளையடுத்தே நீதிச் சேவை ஆணைக்குழு இவரைப் பதவி நீக்கம் செய்திருக்கலாம் என கருதப்படுகின்றது.