புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவில் 12 வயதுச் சிறுமி டினோஜா உயிரிழப்பு!

முல்லைத்தீவு மாவட்டப் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 வயதுச் சிறுமி உயிரிழந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (21.12.2025) குறித்த சிறுமி உணவு உண்ட நிலையில் ஒவ்வாமை ஏற்பட்ட நிலையில் மாஞ்சோலைப் பொது வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டார். குழந்தைகளுக்கான பிரிவு வைத்தியர் பார்வையிட்ட பின்னர் உயிரற்ற சடலமாகவே குறித்த சிறுமி பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு சிலாவத்தைப் பகுதியைச் சேர்ந்த குகநேசன் டினோஜா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சிறுமியின் உயிரிழப்பு அப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.