யாழ் கார்கில்ஸ் தியேட்டருக்கு பிள்ளைகளுடன் சென்றவர்கள் நேரில் பார்த்த அசிங்க காட்சிகள்!! Photos
தற்போது யாழ்ப்பாணம் உட்பட பல்வேறு பகுதிகளிலும் குடும்பமாக தியேட்டர்களில் திரைப்படங்கள் சென்று பார்க்கும் நிலை குறைந்து வருகின்றது. காரணம் தியேட்டர்களில் காவாலிகள் மற்றும் காதலர்கள் செய்யும் கேவலமான செயற்பாடுகளால் தமது குழந்தைகளும் பாதிக்கப்பட்டுவிடும் என்று பலர் நினைக்கின்றார்கள். யாழில் உள்ள கார்கில்ஸ் தியேட்டரில் காவாலிகளின் தொல்லை குறைவாக இருக்கும் என்று நினைத்து அங்கு தமது பிள்ளைகளுடன் குடும்பமாக அவதார் திரைப்படத்தின் இரவுக் காட்சிகயைப் பார்க்கச் சென்ற ஒரு குடும்பம் அங்க பெரும் அதிர்ச்சியைச் சந்தித்துள்ளது. குறித்த தியேட்டரின் ஒரு பிரிவில் காவாலிகள் பலர் பச்ச துாசணத்தில் கத்தியதுடன் அங்கு வைத்தே மது விருந்து பார்ட்டியும் நடாத்தியது பெரும் அதிர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது. தியேட்டர்களில் கார்கில்ஸ் தியேட்டரில் ரவுடிகளின் தொல்லை இருக்காது என எண்ணி பாதுகாப்பாக திரைப்படம் பார்க்கலாம் என நினைத்துச் சென்றவர்களுக்கு அங்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. குறித்த தியேட்டர் நிர்வாகம் இது தொடர்பாக இனிவரம் காலமாவது நடவடிக்கை எடுக்காதா என அங்கு திரைப்படம் பார்த்த பலர் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.




