கடந்தவாரம் யாழ் வலிகாமம் வடக்கு மயிலிட்டி பகுதியில் தூக்கில் தொங்கிய வாறு சடலமாக மீட்கப்பட்ட வரதன் என்பவன் கொலை செய்து தூக்கிலிட்டப்பட்டுள்ளான் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மருதனார் மடம் சந்தையில் வெற்றிலை விற்று வரும் சசி என்ற மயிலிட்டிப் பகுதியைச் சேர்ந்தவள் தனது வெற்றிலைக் கடைக்கு வரும் பணக்காரர்களை தன்வசபடுத்தி அவர்களிடம் இலட்சகண்கில் பணத்தை வாங்கி அவர்களை ஏமாற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளாள்.
குறித்த சசியின் மன்மத லீலையில் மயங்கிய வரதனும் தனது பணத்தையும் கொடுத்து பலரிடம் தானே மீற்றர் வட்டிக்கு வாங்கி சசிக்கு லட்சக்கணக்கில் கொடுத்து வந்துள்ளதாகத் தெரியவருகின்றது.
சசிக்கு மச்சான் ஒருவன் உள்ளான். அவனது பெயர் சுதர்சன். இவன் மிகப் பெரும் பொம்பிளகை் கள்ளன் எனத் தெரியவருகின்றது. தெல்லிப்பளை யூனியன்கல்லுாரிக்கு அருகில் வசித்து வந்த குடும்பம் ஒன்றின் குடும்பத் தலைவனைத் துரத்திவிட்டு அங்கு வாழ்ந்த பெண்ணுடன் கள்ளத் தொடர்பில் இருந்ததால் ஊரவர்களுடன் சேர்ந்து சுதர்சனை அவனது மனைவி பிள்ளைகளும் நைப்புடைத்த சம்பவமும் இடம்பெற்றிருந்தது. சுதர்சனுக்கு சது என்ற மகன் உள்ளான். அவனும் மிகப் பெரும் ரவுடி என்பதுடன் போதைப்பொருள் வியாபாரி எனவும் லீசிங் கட்டாமல் திரியும் வாகனங்களை அடியாட்களுடன் சென்று பறித்து வருவதையும் தொழிலாகக் கொண்டுள்ளான் எனவும் தெரியவருகின்றது.
சந்தையில் வெற்றிலை விற்கும் விபச்சாரி சசி வரதனிடம் வாங்கிய பெரும் பணத்தை வரதனுக்கு கொடுக்காது அவனை கொலை செய்யத் திட்டம் தீட்டி தனது மச்சானான சுதர்சனையும் அவனது மகனான சதுவையும் தனது மயிலிட்டி வீட்டுக்கு வரவழைத்து தங்க வைத்துள்ளாள். அங்கு வரதனை பணம் தருவதாக கூறி வரவழைத்து வரதனை எல்லோருமாகச் சேர்ந்து பிடித்து கை,கால்களை பிடித்து வைத்திருந்து உயிருடன் துாக்கில் தொங்க விட்டுடுள்ளார்கள். அதன் பின்னர் அதிகாலை 2.30 மணியளவில் பலாலி பொஸ்சாருக்கு வரதன் துாக்கில் தொங்கிக் கொண்டிருப்பதாக வாக்குமூலம் வழங்கியுள்ளார்கள். ஆனால் பொலிசார் இதுவரை குறித்த நபர்களைக் கைது செய்யவில்லை என அப்பகுதி மக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றார்கள். வரதனின் உடல் நீதிமன்றத் தீர்ப்பின்படி இன்று தாவாடியில் உள்ள மயானத்தில் புதைக்கப்படவுள்ளது.










