யாழில் சிறுமியை பலருடன் சேர்ந்த துஸ்பிரயோகம் செய்த சின்னத்தம்பியின் மரக்குற்றிகளுடன் மருமகன் கைது!!
யாழ் வட்டுக்கோட்டைப் பகுதியில் 13 வயதுச் சிறுமியை பலருடன் சேர்ந்து துஸ்பிரயோகம் செய்து சிறைக்குச் சென்று பிணையில் வந்து நிற்கும் பொடிமல்லி என அழைக்கப்படும் தொல் புரம் கிழக்கு விநாயகர் மர ஆலை உரிமையாளரான் சின்னத்தம்பி என்பவனுக்காக கொண்டு வரப்பட்ட 25 கடத்தல் முதிரை மரக்குற்றிகளுடன் அவனது மருமகன் கிருஷ்ணகுமார் வட்டுக்கோட்டைப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளான். குறித்த மரக்குற்றிகள் 50 லட்சம் ரூபாக்களுக்கு மேல் பெறுமதியானது என தெரியவருகின்றது. இம் மரக்குற்றிக் கடத்தல் தொடர்பாக சின்னத்தம்பி தலைமறைவாகியுள்ளதாகத் தெரியவருகின்றது.

