புதினங்களின் சங்கமம்

யாழில் ஆட்டோக்காரர்கள் அட்டகாசம்!! மீண்டும் பிக்மீ சாரதி மீது தாக்குதல்!!

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் பிக்மீ சாரதி ஒருவர் மீது தரிப்பிட முச்சக்கரவண்டி சாரதிகள் ஒன்றுகூடி அச்சுறுத்தல் விடுத்ததுடன் தாக்குதலும் நடத்தியுள்ளனர்.குறித்த சம்பவம் பலாலி வீதியில், திருநெல்வேலி பழம் வீதி அருகில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

தாக்குதல் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய சென்றபோதும் பொலிஸாரும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் நடந்ததாக பாதிக்கப்பட்ட பிக்மீ சாரதி கவலை வெளியிட்டார்.

முச்சக்கரவண்டி சாரதிகள் அதிக கட்டணம் அறவிட்ட நிலையில் செயலி வழியான முச்சக்கரவண்டி சேவை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில் செயலி வழியான முச்சக்கரவண்டி சாரதிகள் அச்சுறுத்தலுக்கும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.