புதினங்களின் சங்கமம்

அம்பாறை இளம் குடும்பப் பெண் விதுஷாவை கொன்ற யாழ்ப்பாண கொலைகாரர்கள் அடிக்கும் கூத்து! கணவன் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ இதோ

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் தனித்திருந்த 38 வயது மதிக்கத்தக்க இரண்டு பிள்ளைகளின் தாயான திருமதி மனோதர்ஷன் விதுஷா என்ற குடும்பப்பெண் கடந்த மே மாதம் வெள்ளிக்கிழமை(30) படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

குறித்த குடும்பப் பெண்ணின் படுகொலை தொடர்பில் கடந்த ஜுன் மாதம் 25 ஆந் திகதி சந்தேகத்தின் அடிப்படையில் சகோதரிகளான இரட்டையர் குறித்த குடும்பப் பெண்ணின் வீட்டியில் பணிப்பெண்களாக பணியாற்றிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தனர்.குறித்த கைது நடவடிக்கை படுகொலை நடைபெற்று 24 நாட்களின் பின்னர் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடிக் கண்காணிப்பில் இயங்கும் D.C.D.B என அழைக்கப்படும் அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு குறித்த படுகொலை தொடர்பில் 34 வயதுடைய இரட்டையரான சகோதரிகளை கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குறித்த விசாரணையில் ஏதோ ஒரு அடிப்படையில் தொய்வு ஏற்பட்டதை உணர்ந்த படுகொலை செய்யப்பட்ட குடும்பப்பெண்ணின் கணவர் நாட்டின் ஜனாதிபதி உட்பட பொலிஸ் மா அதிபர் குற்றப் புலனாய்வு பிரிவினர் என பல தரப்பினருக்கு உரிய நீதி கோரி கடிதம் ஒன்றினை எழுதி உரிய படுகொலையின் சூத்திரதாரிகள் என நம்பப்படும் பலரது பெயரினை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தி இருந்தார்.
இதற்கமைய மீண்டும் துரிதமாக செயற்பட்ட D.C.D.B என அழைக்கப்படும் அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவினர் நீண்ட பல்வேறு வடிங்களில் விசாரணைகளை முன்னெடுத்து களுவாஞ்சிக்குடி பகுதியில் உள்ள நகைக்கடை உரிமையாளர் தான் இப்படுகொலையின் பிரதான சூத்தரதாரி என கண்டறிந்துள்ளதுடன் குறித்த கடையில் பணியாற்றிய உரிமையாளரின் சகோதரர் உட்பட அக்கடையின் நம்பிக்கைக்குரிய பணியாளரையும் கைது செய்தனர்.
இக்கைது நடவடிக்கையை அறிந்த பிரதான சந்தேக நபர் தற்போது அவரது சொந்த இடமான யாழ்ப்பாணத்திற்கு தப்பி சென்ற நிலையில் அச்சந்தேக நபரை தேடி D.C.D.B என அழைக்கப்படும் அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவினர் சென்றிருந்தாலும் அவன் இன்னும் பிடிபடவில்லை.
இதே வேளை தப்பி சென்ற பிரதான சந்தேக நபர் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்டதுடன் படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவரின் தங்கையை திருமணம் செய்து பெரிய நீலாவணையில் வசித்து வந்தவராவார்.இச்சந்தேக நபரே நீண்ட காலமாக குறித்த கொலை திட்டம் தீட்டி அரங்கேற்றியுள்ளதை ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.
மேலும் 94 நாட்களின் பின்னர் கைதான பிரதான சூத்தரதாரியின் கடையில் பணியாற்றிய சூத்தரதாரியின் சகோதரர் உட்பட அக்கடையின் நம்பிக்கைக்குரிய பணியாளரையும் அம்பாறைக்கு அழைத்து சென்று மேலதிக விசாரணைகளை அம்பாறை மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
38 வயது மதிக்கத்தக்க இரண்டு பிள்ளைகளின் தாயான குறித்த பெண் மீது கழுத்து பகுதியில் காயங்கள் ஏற்படக் கூடிய வகையில் வெட்டப்பட்டு தாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்ததாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்திருந்தது.மேலும் இப்படுகொலை இடம்பெற்ற வேளை மரணமடைந்த குடும்ப பெண்ணின் கணவர் வெளிநாடு ஒன்றில் தொழில் நிமிர்த்தம் தங்கி இருந்ததுடன் சம்பவம் நடைபெற்ற வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவி கேமராவின் காணொளிகளை சேமிக்கும் கருவி (DVR) கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களால் எடுத்துச்செல்லப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இது தவிர படுகொலை செய்யப்பட்ட குறித்த பெண்ணின் கடந்த கால கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மிக நீண்ட விசாரணை மேற்கொண்டு அவற்றை மீள தன்னிடம் பெற்று வழங்கியதற்காகவும் துரித கதியில் கொலையாளிகளை இனங்கண்டு பாதிக்கப்பட்ட எங்கள் தரப்பினருக்கு பல்வேறு உதவிகளை வழங்கியதற்காக படுகொலையான பெண்ணின் கணவர் உருக்கமாக நன்றிகளை கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸாருக்கு தெரிவித்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
இதே வேளை கொலையான பெண்ணின் கணவர் சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோக்கள் மற்றும் பதிவுகளை அப்படியே இங்கு தந்துள்ளோம்.
May be an image of one or more people and text that says "((கஞ்சா வித்து ஐஸ் வித்து))) மற்றவர்களை ஏமாற்றி பணம் பறித்து அவர்களை கொலை செய்வதுதான் இந்த நயவள்சகளின் ன் தொழில் இதற்கு பொலிஸ் காரனுகளம் : உங்களு டங்களக்கான நேரம் வந்துவிட்டது கொழும்பு குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவு O nd c Tactok O 31 comments 28 shares"May be an image of one or more people, slow loris and textMay be an image of ticket stub and text that says "Mano Tharshan is with Thuwa Nawa and 12 others. October என் மனைவியின் கொலைக்கு காரணமாக இருந்த முக்கிய கொலையாளி மற்னும் அவனுக்கு உடந்தையாக இருந்த மரு சில பொலிஸ் அதிகாரிகள் எல்லாரும் கவனம் NMRRIENOENOPOUICE Kpcи TERDENT POLICE MalS T. MAND THASHAR aEean MEUSTON ASA DOnA. 3AИR DEFUTY INSPECTOR GHENERALO Иc_ oF POLICE (AOREAKOЛO ΣHЙ MANO THASHAN IOSETRAL ANCA Koи PROMLSRN- +2 2"
May be an image of one or more people and text that says "திருமதி மனோதர்ஷன் விதுஷா மலர்வு- 1987.01.11 ooig-1987.01.12_f19-2025.0.30 உதிர்வு- 2025.05.30"